உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் நாய் வளர்த்தால் ரூ.1,000 அபராதம்!

மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் நாய் வளர்த்தால் ரூ.1,000 அபராதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 23 இனங்களை சேர்ந்த நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. உரிமம் பெறாமல் நாய் வளர்த்தால், உரிமையாளருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பூங்காவில், 5 வயது சிறுமியை இரண்டு, 'ராட் வீலர்' இன நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நாள், சூளைமேடு பகுதியில் வாக்கிங் சென்ற தம்பதியை நாய் கடித்தது. மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சென்னை போன்று ஏனைய நகரங்களிலும், நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன. தெருநாய்களை தொடர்ந்து, வீட்டில் வளர்க்கும் நாய்களும் மனிதர்களை கடிப்பது அதிகரிப்பதால், மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உயர்மட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடந்தது.அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை குறித்து தமிழ்நாடு பிராணிகள் நல வாரிய உறுப்பினர் செயலர் அமிர்தஜோதி கூறியதாவது:கால்நடை வல்லுனர்கள் குழு பரிந்துரைப்படி, 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள், மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வளர்ப்பு பிராணியாக விற்கவும், வளர்க்கவும் தடை விதிக்கப்படுகிறதுதற்போது இவ்வகை நாய்களை வைத்திருப்போர், அவற்றுக்கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். வெளியில் கூட்டி செல்லும் போது, இணைப்பு சங்கிலி மற்றும் வாய்க்கவசம் அணிவித்து இருக்க வேண்டும்இவை நீங்கலாக, எந்த வகை வளர்ப்பு நாயாக இருந்தாலும், தரமான கழுத்துப்பட்டை அல்லது தோள்பட்டை அணிவித்து வெளியே அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு அமிர்தஜோதி கூறியுள்ளார்.நாய் வளர்ப்போர் அதற்கு உரிமம் பெற வேண்டும் என, ஏற்கனவே விதிகள் உள்ளன. எனினும், மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உரிமத்துக்கான விண்ணப்பங்கள் வருகின்றன.எனவே, உரிமம் பெறாமல் நாய் வளர்ப்போருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.முதல் கட்டமாக, சென்னையில் இந்த விதி அமல் செய்யப்படும். தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் செயல்படுத்தும் என்று, அதிகாரிகள் கூறினர்.பல செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்களுக்காக, ஆபத்தான நாய் இனங்களையும், அந்நிய உயர் ஜாதி நாய்களையும், இனப்பெருக்கம் செய்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். குதிரை விற்றால், 12 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. ஆனால், மற்ற கால்நடைகள் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. வணிக ரீதியாக நாய்களை விற்க, 28 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும். இதனால், உயர் ஜாதி நாய்களின் விலை அதிகரிக்கும். அவ்வளவு விலை கொடுத்து வாங்குபவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வளர்க்க முன்வருவர். அதிக விலை கொடுத்து வெளிநாட்டு இனங்களை வாங்க இயலாதவர்கள், ஆதரவின்றி திரியும் தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்க முன் வருவர். இதனால், இந்திய இன நாய்கள் பாதுகாக்கப்படும். மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.- கே.எம்.கார்த்திக், விலங்கு நல ஆர்வலர், திருச்சி.

அரசு தடை செய்த 23 இனங்கள்

பிட்புல் டெரியர், அமெரிக்கன் ஸ்டப்போர்டுஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகோ அர்ஜென்டினா, தோசா இனு, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல்,கன்கல், சென்ட்ரல் ஆசியன் ெஷபர்டு டாக், காக்கேஷியன் ெஷபர்டு டாக், சவுத் ரஷ்யன் ெஷபர்டு டாக், டோன்ஜாக்-சர்ப்ளேனினேக், ஜாப்பனிஸ் தோசா-அகிடா, மேஸ்டிப், ராட்வெய்லர், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப்டாக், கேனரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு, கேன் கார்சோ, பேண்டாக்.

உத்தரவை திரும்ப பெற்ற தமிழக அரசு

23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது கால்நடை பராமரிப்பு துறை; மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி தடை உத்தரவை தமிழக அரசு அறிவித்திருந்தது; மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழக கால்நடை பராமரிப்பு துறை பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.

3 குழந்தைகள் காயம்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வடுகம் ஆதிதிராவிடர் காலனி சாலையில், நேற்று காலை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். ஐந்து வயது தேஜேஸ்வரன், யாகவீர், 11 வயது பிரியதர்ஷினி ஆகியோரை அங்கே சுற்றித்திரிந்த வெறி நாய் கடித்துள்ளது. படுகாயம் அடைந்த மூன்று குழந்தைகளையும் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சொக்கநாதபட்டியில் பொதுமக்களை தெருநாய் ஒன்று கடித்ததில் ஆண், பெண், குழந்தைகள் என, 12 பேர் காயமடைந்தனர்.'

நடவடிக்கை எடுக்க முடியாது'

சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பகுதியில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்த்தால், அதற்கு பதிவு உரிமம் பெற்றிருப்பது அவசியம். சென்னையில், 50,000க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் இருக்கும் நிலையில், இதுவரை 1,670 நாய்கள் மட்டுமே மாநகராட்சியிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாத நாய்களுக்கு, ஜூலை மாதம் முதல், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. தற்போதுள்ள சட்டத்தில், பிராணிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பது தான் உண்மை. நாய்களை குறை கூறுவதை விட, வளர்ப்பவர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சட்டப்படி, நாய்களுக்கு கருத்தடை செய்து மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மாடு முட்டுவது, நாய்கள் கடிப்பது தேசிய பிரச்னை. இதற்கு தீர்வு காண்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. நாய் வளர்ப்பவர்கள் அவற்றை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். விதியை மீறும் நாய்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

boopathi subbarayan
மே 13, 2024 20:37

What about stray dogs and people raising dogs in the streets?


Narayanan
மே 13, 2024 15:31

இந்த திமுக அரசு எந்த எந்த வழிகளில் பொது மக்களிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்று மூக்கில் வியர்த்து கொண்டு கண்டுபிடிக்கிறார்கள் மாநகராட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுமதி வாங்கியபின் அந்த நாய் யாரையாவது கடித்தால் மாநகராட்சி பொறுப்பெடுத்துக்கொள்ளுமா ? என்னே ஒரு சிந்தனை


Nagercoil Suresh
மே 13, 2024 00:37

கால்நடை வல்லுனர்கள் குழு பரிந்துரைப்படி, வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள், மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளன இது முழுவதும் உண்மையான தகவல் தான் காரணம் அவைகள் நாய்கள் இல்லை வேறு மிருகங்களிடமிருந்து சில கயவர்கள் இனப்பெருக்கம் செய்தவை, காய்கறிகள், பழவகைகள் ஒட்டு கட்டுவதை போல்தமிழகத்தில் தெருக்களில் நாய்களை நூறு சதவீதம் ஒழிப்பதற்கு ஸ்டாலின் சட்டம் கொண்டுவரவேண்டும் அதேபோல் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் வாகன கட்டாய இன்சூரன்ஸ் திட்டம் போல் கொண்டு வரவேண்டும் அபராதம் ஆயிரம் ரூபாய் கொஞ்சம் அதிகம் தான் முதல்ல தெருநாய் அழுக்கில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் அதன் பின் வல்லரசு கனவு காணலாம்


Bhaskaran
மே 12, 2024 16:05

அபராதம் மிகவும் அதிகம் எசமான்


ஆபிரகாம்
மே 10, 2024 22:20

நாய்களை பறிமுதல் செய்து காட்டில் விடலாமே


1968shylaja kumari
மே 10, 2024 18:26

தடைசெய்யப்பட்டுள்ள கிளியை வைத்திருந்த அன்றாட காய்ச்சி கிளிஜோசியரிடமிருந்து கிளியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தது போல, வகையான தடை செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்போர் உடனே வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏன் உத்திரவு போடக்கூடாது ? வகையான தடைசெய்யப்பட்ட நாய்களை வைத்திருப்போர் அவற்றை கருத்தடை அறுவைசிகிச்சைசெய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளாரேதடைசெய்யப்பட்டுள்ள கிளியை வனத்துறையிடம் ஒப்படைப்பதைப்போல நாயை ஏன் ஒப்படைக்கூடாது?


என்றும் இந்தியன்
மே 10, 2024 17:52

திமுககாரர்கள் இதை பற்றி கவலை படவேண்டாம்ஏன் இப்போ தான் நாய்களை வளர்க்கலாம் என்று உத்தரவு வந்து விட்டதே ஆகவே தான்


RAAJA69
மே 10, 2024 17:00

Licence வாங்கிய நாய் கடிக்காதaa. நாய்களின் முன் பற்களை பற்கறை புடுங்குவது தான் ஒரே வழி.


Dhandapani
மே 13, 2024 07:45

சரியா கேட்டீங்க சார், லைசென்ஸ் வாங்கிய நாயி கடித்தால் கடிபட்டவருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து காயம் பட்டவருக்கு லட்சம், நாயி கடித்து இறந்தால் தட்சன் அரசு தருமா சார்


சுலைமான்
மே 10, 2024 14:26

இங்கே கடித்தது வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட நாய். ஆனால் இந்த அரசாங்கத்தின் தடையோ நாட்டு நாய்களின் மீது. பாதிக்கப்படுவது உணவுக்காக அலையும் பாவப்பட்ட தெருநாய்கள்.


சுலைமான்
மே 10, 2024 14:24

அனைத்து உயிர்களும் வாழவே இந்த பூமி. நாய்களுக்கு இனப்பெருக்க தடை செய்ய ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அதிகாரிகள் அதை ஆட்டயப்போட்டு விடுகின்றனர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை