உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருபக்கம் மருத்துவமனை; மறுபக்கம் மது கடையா?

ஒருபக்கம் மருத்துவமனை; மறுபக்கம் மது கடையா?

மதுரை: 'பொது சுகாதாரத்தை மோசமாக பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தப்படுவதை மக்கள் நல அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திண்டுக்கலைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:திண்டுக்கல் - திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துவோருக்கு, மது அருந்துவோரால் இடையூறு ஏற்படுகிறது. கடையை மூட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

துார கட்டுப்பாடு விதி

நேற்றையை விசாரணையின் போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இரு வெவ்வேறு பள்ளிகள் 30 மற்றும் 50 மீட்டரில் அமைந்துள்ளன. வழிபாட்டுத்தலம் குறுகிய துாரத்திலும், அரசு மருத்துவமனை 100 மீட்டரிலும் அமைந்துள்ளதாக மனுதாரர் கூறுவது தவறானது.'மேலும் பள்ளி, வழிபாட்டுத்தலம், மருத்துவமனையிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் டாஸ்மாக் இருக்க வேண்டும் என்ற துார கட்டுப்பாடு விதிமுறை இப்பகுதிக்கு பொருந்தாது' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:சில சூழ்நிலைகளில் துார அளவுகோலை கடைப்பிடிப்பது சரியானதல்ல என இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஒரு டாஸ்மாக் கடை வாயிலாக, அப்பகுதியில் சாலையை பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக பள்ளி நேரங்களில் குழந்தைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

முதன்மை கடமை

அரசு தன் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வது மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை முதன்மை கடமைகளாக கருத வேண்டும்.மக்கள் நல அரசு, பொது சுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முழுமனதுடன் பாடுபட வேண்டும். மக்கள் நல அரசு, ஒருபுறம் அதிக மருத்துவமனைகளை நிறுவி, மறுபுறம் ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை நிறுவுவது முரண்பாடானது. பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க, மதுவிலக்கை படிப்படியாக மெதுவாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை இரண்டு வாரங்களில் மூட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

M S RAGHUNATHAN
ஜூன் 05, 2025 10:53

அய்யா நீதியரசர்களே, நீங்கள் சூதானமாக இருக்கவும்.. நீதி மன்றங்கள் அருகில் அல்லது நீதி மன்ற வளாகத்தில் உள்ளேயே மதுக் கடைகள் திறந்தாலும், பார் திறந்தாலும் ஆச்சரியப் படவேண்டாம். கேட்டால், நாங்கள் மக்கள் விருப்பதின் அடிப்படையில் திறந்து இருக்கிறோம் என்று அரசு சொல்லும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 05, 2025 12:20

அதிகமாக மதுவிற்றால்தான்... நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் ,,,மதுவிற்கவில்லையென்றால் பாஜக உள்ளே புகுந்துவிடும் ...சனாதனம் வந்துவிடும் ...மகளிர் உரிமை தொகை கொடுக்க இயலாது .. என்று ஒரே போடாய் போட்டால் போகிறது ...யார்வந்து ஒப்பிட்டு பார்க்க போகிறர்கள் ...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 05, 2025 10:38

இன்று பள்ளி செல்லும் மாணவன் நாளை டாஸ்மாக் வாடிக்கையாளர் ... என்று கணக்கு போடுகிறார்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 05, 2025 09:38

இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் என்ன சொல்ல வருகிறது. பள்ளிகளுக்கு அருகில் அல்லது பள்ளி செல்லும் பாதையில் இருக்கும் மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா


Varadarajan Nagarajan
ஜூன் 05, 2025 08:21

விடியா மாடல் அரசில் குடிமக்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்களின் வசதிக்காக டாஸ்மாக்கை மருத்துவமனைக்கு அருகில் திறந்துள்ளதை குற்றமாக கருதக்கூடாது என அரசு வழக்கறிங்கர் வாதாடவில்லையா? இதுவரை இதுபோன்ற வழக்குகளில் அளித்த தீரிப்பின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று நீதிமன்றம் கேட்கவேண்டும். பல உத்தரவுகள் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.


VENKATASUBRAMANIAN
ஜூன் 05, 2025 07:30

எந்த விதியையும் மதிக்க மாட்டார்கள். இதுதான் திராவிட மாடல்


Padmasridharan
ஜூன் 05, 2025 06:59

மனுஷங்கள பாதுகாக்கிற மருத்துவமனையில் நடக்கும் மின்சார விபத்துக்கள் ஏன் மனுஷங்களுக்கு குற்றநோய்கள் ஏற்படுத்தும் மதுக்கடைகளில் நடப்பதில்லை சாமி. ..


SUBBU,MADURAI
ஜூன் 05, 2025 06:59

ஒரு பக்கம் தண்டனை, மறுபக்கம் ஜாமீனா?


Svs Yaadum oore
ஜூன் 05, 2025 06:22

இந்த டாஸ்மாக் இப்பொது ஒன்றுமில்லை.. இந்த விடியல் ஆட்சியில் ஊரெங்கும் டாஸ்மாக் விட படு கேவலமான கஞ்சா மெத்து போதை.. சென்னை முழுக்க கஞ்சா .....ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மனதை உறைய வைக்கும் சம்பவம்.. தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மது போதையில் தடுமாறிய 19 வயது இளைஞன், 80 வயது மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பின்னர் கொடூரமாக கொலை ....


kumarkv
ஜூன் 05, 2025 17:05

வியாபாரத்தை விரிவு படுத்துகிறார்கள்


Kundalakesi
ஜூன் 05, 2025 06:12

மக்கள் தெளிவானால் அரசு கவிழ்ந்து விடும்