உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவின் பால் விலையில் மாற்றம் செய்ய திட்டம்

ஆவின் பால் விலையில் மாற்றம் செய்ய திட்டம்

மதுரை : ஆவின் பால் விலையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மாத சந்தா மற்றும் தினசரி விற்பனையில் ஆவின் பால் கிடைக்கிறது. தினசரி விற்பனை விலையை விட, சந்தாதாரருக்கு லிட்டர் ஒன்றிக்கு ஒரு ரூபாய் குறைவாக கிடைக்கிறது. இதை சாதகமாக்கி, சந்தாதாரர் பெயரில் கடை விற்பனையாளர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை தீர்க்க, பால் விலையை சீராக்க முடிவு செய்து உள்ளனர். சந்தா பால், தினசரி பால் விலையை ஒரே மாதிரி நிர்ணயிக்க, ஆவின் குழுத்தலைவரான கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பரிசீலனை நடந்து வருகிறது. விரைவில் ஆவின் விலையில் மாற்றம் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை