மேலும் செய்திகள்
காலை உணவுத் திட்டத்தில் வேலையிழக்கும் 1,000 பெண்கள்?
57 minutes ago
நெல் கொள்முதல் ஈரப்பதம் பிரதமருக்கு முதல்வர் கடிதம்
1 hour(s) ago | 1
பிரதமர் மோடி இன்று புட்டபர்த்தி, கோவை வருகை
1 hour(s) ago | 1
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சென்னை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடுகின்றனர். இதில் நகராட்சி பகுதி கழிவு நீர், குப்பைகள் கலக்கின்றன. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தடுக்க நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், ராமேஸ்வரம் நகராட்சி தரப்பு வழக்கறிஞர் சரவணன் ஆஜராகினர். நகராட்சி கமிஷனர்,'ரூ.52.60 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அக்னி தீர்த்தத்திலிருந்து 6 கி.மீ.,துாரத்திலுள்ள ஓலைகுடாவில் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஜூனில் துணை முதல்வர் துவக்கி வைத்தார். பயன்பாட்டில் உள்ளது. தற்போது கழிவு நீர் கலக்கவில்லை,' என பதில் மனு தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், 'அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து போட்டோ ஆதாரங்களுடன் நவ.26 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
57 minutes ago
1 hour(s) ago | 1
1 hour(s) ago | 1