உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்கு சென்றாலும் அதிமுக கூட்டணி அலைகள் வீசுகின்றன: இ.பி.எஸ்., பேச்சு

எங்கு சென்றாலும் அதிமுக கூட்டணி அலைகள் வீசுகின்றன: இ.பி.எஸ்., பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: தான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலைகளே வீசுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் அதிமுக தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது:நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலைகளே வீசுகின்றன. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். திமுக.,வின் தில்லுமுல்லுவை அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். திமுக.,வினர் ஆட்சி அதிகாரத்தை வைத்து ஓட்டுகளை பெறும் முயற்சியை முறியடிக்க வேண்டும்.எடப்பாடி தொகுதி அதிமுக.,வின் கோட்டை; யாராலும் கைப்பற்ற முடியாது. இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்... கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுக.,வின் வெற்றி, கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும். கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் திமுக, இதுவரை 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களையும் நிறுத்திவிட்டது.அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என பொய் பிரசாரம் செய்கின்றனர்; நம்பாதீர்கள். நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்படாது; யாருக்காவது நிறுத்தப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக.,வில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை வேட்பாளராக நினைத்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். திமுக.,வில் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களாக இருப்பவர்களில் பலர் அதிமுக.,வில் இருந்து சென்றவர்களே. இப்படி அதிமுக அடையாளம் காண்பித்து, கட்சிக்கு துரோகம் செய்து திமுக.,வில் இணைந்தவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Godfather_Senior
ஏப் 03, 2024 20:37

உங்க ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும்தான் இந்த கூட்டம் கூடுகிறது என்பதை எல்லோரும் அறிவர் ஆனால் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர் அதுவும் கழகங்கள் இல்லாத ஒரு ஆட்சி ஆகவே பணம் பெறாமல் அண்ணாமலைக்கு கூட்டம் கூடுகிறது மேலும் ஓட்டும் போடுவார்கள் ஜூன் நான்காம் தேதி அஇஅதிமுக மூன்றாமிடமா அல்லது நான்காமிடமா என்று.


Rathinakumar KN
ஏப் 03, 2024 20:23

கேரளாவில் தடை செய்யப்பட்டதீவிரவாத இயக்கத்தோடு கூட்டணி வைத்துக் கொண்டு அலை வீசுதுன்னு சொன்ன தமிழ்நாடு ஜனங்க உங்களை எப்படி நம்புவார்கள் இது மக்களை வாட்டும் வெப்ப அலையே


குமரி குருவி
ஏப் 03, 2024 18:08

அலையை மீறி சுனாமி வருவது கண்ணுக்கு தெரியுதே..


sethu
ஏப் 03, 2024 15:58

அன்னான் இடப்ஸ் எங்கே இருந்து இந்த அறிக்கையை விடுகிறார் சோமாலியாவிலிருந்தா? மேட்டரில் தண்ணீரே இல்லை எடப்பாடி பழனி என்னமோ அலைவ் வருபுயல்வருந்து சுனாமி வருது நாற்பதும் நமதே என முழங்குகிறார்


Palanisamy Sekar
ஏப் 03, 2024 15:51

வெய்யிலின் தாக்கம் வெப்ப அலை என்பது கூட தெரியாமல் பேசுகின்றார் பழனிச்சாமி ஆனால் இந்த முறை மிகப்பெரிய தவற்றினை பழனிச்சாமி செய்தார் என்பதை அரசியல் வரலாறு எழுதும் திமுகவுடனான கள்ளக்கூட்டணியும் அதற்க்கு பரிகாரமாக கொடநாடு கொலைவழக்கு தள்ளப்போவதையும் அந்த வரலாறு சொல்லிவைக்கும் தன்னை எம் ஜி யாராக எண்ணியது தவறு என்று அவருக்கு புரியவைக்கும் தேர்தல் முடிவுகள் தப்பு பண்ணீட்டீங்க பழனிச்சாமி என்றே தொண்டர்களும் சொல்வார்கள் சம்முவம்தான் இதற்கு முழு காரணம் என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி