உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

அதிமுக., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மார்ச் 26ம் தேதி கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக பேசிய பேச்சுகள் சர்ச்சையானது. இது தொடர்பாக முல்லைவாடி வி.ஏ.ஓ., கோபிநாத், ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வீடியோ குறித்து, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று ஆத்தூர் டவுன் போலீசார், அதிமுக வேட்பாளர் குமரகுரு மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஏப் 14, 2024 17:15

திமுக்கா மற்றும் அதிமுக்கா இருந்திருக்கும் கொள்கைய்ய வேரூ பாடில்லை .... பாராளு மன்றம் சென்றாலும் தமிழனுக்கோர் குரல் எழுப்ப மாட்டார்கள் தலைவன் குடும்ப ஆட்டத்திற்கு தகுந்த மாதிரி பேசி கொண்டிருப்பார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை