உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாமகவுக்கு ஓட்டுப்போடுங்க: அதிமுகவினருக்கு ராமதாஸ் ‛‛ஐஸ்

பாமகவுக்கு ஓட்டுப்போடுங்க: அதிமுகவினருக்கு ராமதாஸ் ‛‛ஐஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அதிமுக.,வினர் தங்களது ஓட்டுகளை வீணடிக்கக்கூடாது; பாமக.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக - பாமக - நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற கூடாது என திமுக.,வினர் குறுக்குவழிகளில் முயற்சிக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z05vgwld&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாமக.,வுக்கு ஓட்டுப்போட்டால், நலத்திட்டங்கள் கிடைக்காது, பணிகள் நடக்காது என ஆளும்தரப்பினர் கூறவதாக தகவல் வெளியாகிறது. திமுக.,வின் அத்துமீறல்களை மீறி 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பாமக வெற்றி பெறும். அதிமுக.,வினர் தங்களது ஓட்டுகளை வீணடிக்கக்கூடாது; பாமக.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். அதிமுக, பாமக.,வுக்கு பொது எதிரி திமுக தான். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதல்வர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தவிர்க்க முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.

பதவி விலக வேண்டும்

பாமக தலைவர் அன்புமணி 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சோகம் விலகும் முன்பே விழுப்புரம் அருகே டி.குமாரமங்கலம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் சாவு. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து எவ்வளவு பேர் உயிரிழந்தாலும், கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த மாட்டோம் என்ற மனநிலையில் தமிழக அரசும், போலீசாரும் இருப்பதையே இது காட்டுகிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய சாவுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

முருகன்
ஜூலை 04, 2024 21:58

தேர்தலில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் சொல்ல கூடியவர்


Justin Jose
ஜூலை 04, 2024 17:42

ஒரு கிலோ மாம்பழம் குடுய்யா ... ஓட்டையில போட்டுருவோம்


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 04, 2024 15:10

நீங்கள் எல்லாம் இண்டி கூட்டணி மாதிரி ஒரு பாரத கூட்டணின்னு ஒண்ணா இருந்தீங்கனா திமுகவை வீழ்த்தலாம்.


Anantharaman Srinivasan
ஜூலை 04, 2024 15:04

விக்கிரவாண்டி வாக்காளர்களே ஓவ்வொரு தேர்தலுக்கும் ஓவ்வொரு கட்சி கூட்டணிக்கு தாவும் பாமக விற்கா உங்கள் ஓட்டு..?? யோசித்து முடிவெடுங்கள்.


அரசு
ஜூலை 04, 2024 14:40

இவர்கள் வெற்றி பெற்றால் ஜாதி அரசியல் வெற்றி பெற்றது என்றாகி விடும்.


karutthu
ஜூலை 04, 2024 13:08

பா ம க வினர் நன்றி கெட்டவர்கள் போலாகிவிட்டனர் .அன்புமணி ராமதாசு ஆ தி முக தயவில் ராஜ்யசபா எம்பீ ஆகிவிட்டார் சட்டசபையில் எம் எல் ஏ ஆகிவிட்டார்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை கூட்டணி மாறி பா ஜா க விடம் சேர்ந்துவிட்டாரகள் .இவர்களுக்கு போடும் ஓட்டை நோட்டா விற்கு போடவேண்டும் .உண்மையான கட்சிக்கு விசுவாசமான தொண்டர்கள் அனைவரும் நோட்டா விற்கு போடுங்கள்


தத்வமசி
ஜூலை 04, 2024 12:27

இவர் கேட்பதில் நியாயம் உண்டு. கேட்பதிலும் தவறில்லை. ஓட்டு போடாதவர்கள் ஆட்சியைப் பற்றி எந்த கேள்வியையும் கேட்க தகுதி கிடையாது என்று ஒரு நீதிமன்ற குறிப்பு இருப்பதாக அறிகிறேன். ஜனநாயக நாட்டில் கட்சி போட்டி போடலாம், போடாமலும் இருக்கலாம். அதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமோ, கஷ்டமோ இல்லை. ஆனால் பொது மக்கள் ஓட்டு போடாமல் இருத்தல் கூடாது. ஓட்டுப் போடுங்க. இருக்கவே இருக்கிறது நோட்டாவுக்கு போடுங்க.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ