| ADDED : ஜன 13, 2024 10:49 PM
சென்னை:சென்னையில் இருந்து துாத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில், கடந்த இரண்டு நாட்களாகவே பயணியர் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால், உள்நாட்டு விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால், சற்று கூடுதல் கட்டணமானாலும் விமானங்களில் பயணிக்க வந்தோம். ஆனால், இங்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல, சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமானங்களில் தேவையை அடிப்படையாக கொண்டே, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, மூன்று மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், கட்டணம் குறைவாக இருக்கும். சிறப்பு விமானங்களை உடனடியாக இயக்க முடியாது. அனுமதி பெற குறைந்தது, மூன்று மாதங்கள் ஆகி விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.