உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவினுக்கு போட்டியாக களமிறங்கியது அமுல்: 2 மாதங்களில் விற்பனைக்கு வருகிறது பால்

ஆவினுக்கு போட்டியாக களமிறங்கியது அமுல்: 2 மாதங்களில் விற்பனைக்கு வருகிறது பால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர் விற்பனையில் இறங்கியுள்ள அமுல் நிறுவனம், இரண்டு மாதங்களில், பால் விற்பனையை துவக்க திட்டமிட்டு உள்ளது.தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல் வாயிலாகவும், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு போட்டியாக, மற்றொரு மாநில பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது இல்லை.இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் பாக்கெட் தொழிற்சாலையை அமுல் நிறுவனம் அமைத்து வருகிறது. இங்கிருந்து பால், தயிர், பனீர் உள்ளிட்ட பொருட்களை, தமிழகம் முழுதும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள், 2023ல் துவங்கின. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அமுல் நிறுவனம் பால் விற்பனையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனால், பால் கொள்முதலை அமுல் நிறுவனம் துவங்கவில்லை. ஆனாலும், கிருஷ்ணகிரியில் பால் பண்ணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் நிறுவனம் மீண்டும் மும்முரம் காட்ட துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர், யோகர்ட், லஸ்ஸி விற்பனையை அமுல் நிறுவனம், 'டீலர்'கள் வாயிலாக துவங்கியுள்ளது. இதற்கான கிடங்கு, செங்குன்றம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது.இரண்டு மாதங்களில் சித்துார் பால் பண்ணையில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் முடிவெடுத்துள்ளது. சென்னையில் நாள்தோறும் 14.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகும் நிலையில், அமுல் வரவால் ஆவின் விற்பனை முடங்கும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Lucky Srinivasan
மே 21, 2024 13:13

அமுல் பால் இப்போது அமெரிக்காவிலேயே விற்பனை ஆகிறது தமிழ்நாட்டில் விற்றால் என்ன?


Sathiesh
மே 14, 2024 19:11

அதற்கு பேட்டியாக, ஆவின் குஜராத்தில் விற்பனை துவங்க வேண்டியது தானே?


Senthil
மே 10, 2024 04:58

விவசாயிகளுக்கு ஒரு நல்லது நடந்து விடாக்குகூடாது என இந்த மாடல் அரசு விழிப்புடன் இருக்கிறதுஎத்தனை நாட்களுக்கு தான் இப்படி விவாசாயிகளின் இரத்ததை உறிஞ்சி குடிப்பார்கள் பத்து பால் கொள்முதல் ஆலைகள் வந்தால் அவர்களிடம் போட்டி ஏற்பட்டு விவசாய நியமான விலை கிடைக்கும் ஆனால் புதிய பால் கொள்முதல் ஆலைகளை வரவிடாமல் தடுத்து விவசாயிகளுக்கு வளர்ச்சி ஆண்டுகள் பின்னோக்கி தள்ளாவே இந்த திராவிட அரசு முயற்சி செய்து வருகிறது


Senthil
மே 10, 2024 04:58

விவசாயிகளுக்கு ஒரு நல்லது நடந்து விடாக்குகூடாது என இந்த மாடல் அரசு விழிப்புடன் இருக்கிறதுஎத்தனை நாட்களுக்கு தான் இப்படி விவாசாயிகளின் இரத்ததை உறிஞ்சி குடிப்பார்கள் பத்து பால் கொள்முதல் ஆலைகள் வந்தால் அவர்களிடம் போட்டி ஏற்பட்டு விவசாய நியமான விலை கிடைக்கும் ஆனால் புதிய பால் கொள்முதல் ஆலைகளை வரவிடாமல் தடுத்து விவசாயிகளுக்கு வளர்ச்சி ஆண்டுகள் பின்னோக்கி தள்ளாவே இந்த திராவிட அரசு முயற்சி செய்து வருகிறது


S MURALIDARAN
மே 09, 2024 16:47

ஆயினும் கொள் முதலை அதிகரித்து அமுலை விட குறைந்த விலையில் விற்றால் மக்கள் வாங்கப் போகிறார்கள்


S Ramkumar
மே 09, 2024 11:13

இப்ப அமுல் வந்தால் என்ன இங்கேயே விஜய் பால், தமிழ் பால், அம்மையார் பால், கே சி பால், மில்கி மிஸ்ட், ஆரோக்கிய போன்ற பால் வகைகள் கிடைக்கின்றன அவைஎல்லாம் ஆவினுக்கு போட்டி இல்லையா வேண்டுமானால் கூட்டுறவு பால் இல்லை என்று சொல்லலாம்


sutharsan s
மே 09, 2024 10:44

அமுல் நிறுவனம் விவசாயிகளுக்கு மாடுகளை வளர்க லோன் கொடுத்தால் தமிழகத்தில் மாடுகள் அதிகம் வளர்பதில் ஆர்வம் காட்டுவார்கள்நடுதரமக்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்


Indhuindian
மே 09, 2024 05:47

மிகவும் நல்ல செய்தி வரவேற்கப்பட வேண்டிய விஷயம் பால் சப்ளை செய்பவர்களுக்கும் வாங்குவர்களுக்கும் ஒரு நல்ல செய்தி பால் விற்பவர்களுக்கு சரியானா அளவுக்கு சரியான உரிய நேரத்தில் பணம் கிடைக்கும் அது நேரடியாக அவங்க வாங்கி கணக்குக்கே போயிடும் இடை தரகர்கள் கமிஷன் அடிக்க முடியாது பால் உபயோகிப்பாளர்களுக்கு சரியான அளவு இப்போது இருக்கும் ஒரு அரை லிட்டர் பாக்கெட்டுக்கு இருபது முப்பது மில்லி குறைத்து ஏமாற்றுவது கோஷுப்பு கையாடல் எல்லாம் நடக்காது சீக்கிரமே ஆவின் நிர்வாகத்திற்கு அது விற்பனை செய்யும் பால் மூலமாகவே பால் ஊற்றும் நிகாஷ்சி நடக்கும்


R Kay
மே 09, 2024 01:06

Welcome எங்களுக்கு தரமான தயாரிப்புகள் தேவை நிச்சயம் தரமாயிருந்தால் வரவேற்போம் ஆவின் தயாரிப்புகள் கேவலமாக இருக்கின்றன வேறு வழியின்றி வாங்கி தொலைக்கிறோம் பாலில் வெறும் பால் பவுடர் வாசனை வருகிறது


Natarajan Ramanathan
மே 08, 2024 20:04

அமுல் வந்தால் கண்டிப்பாக உடனே அமுல் பாலுக்கு மாறிவிடுவேன் இதுவரை ஆவின் தவிர வேறு பால் வாங்கியதே இல்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை