உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

பழநியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயிலுக்கு இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாதயாத்திரை, ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்றே வந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் செல்ல வின்ச், தரிசன வரிசையிலும் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். காவடி எடுத்து அலகு குத்தி ஆட்டம் பாட்டத்துடன் வந்தனர். கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அதிக கூட்டம் இருந்ததால் வெயிலால் சிரமம் அடைந்தனர். சுற்றுலா வாகன பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தாமல் கிரிவீதியில் நிறுத்துவதால் பக்தர்களுக்கு இடையூறு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோப்கார், வின்ச் நிலையங்கள் அருகே வாகனங்களை நிறுத்த முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை