மேலும் செய்திகள்
பள்ளிகளுக்கு 22 அடி சாலை கட்டாயம்
8 minutes ago
தேர்தலில் தவறு நடப்பது உண்மை; பிரேமலதா
11 minutes ago
லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனம்
13 minutes ago
கோவை: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து, 'செயற்கை நுண்ணறிவுடன் எதிர்காலத்தை புதுமைப்படுத்துதல்' எனும் தலைப்பில் பிராந்திய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கில், சென்னை, ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவன செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு தலைவர் சுஜாதா எஸ்.அய்யர் பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு, வங்கித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படும்.நம் நாட்டை சுயசார்பு மிக்கதாக உருவாக்க செயற்கை நுண்ணறிவு திறன் பயன்படும்,'' என்றார். 1 லட்சம் கோடி ரூபாய் சென்னை ஐ.ஐ.டி., வத்வானி ஸ்கூல் ஆப் டி.எஸ்.ஏ.ஐ., பேராசிரியர் கீதா கிருஷ்ணன் ராமதுரை பேசுகையில், ''அனைத்து துறைகளின் பிரச்னைகளுக்குமே செயற்கை நுண்ணறிவில் தீர்வு உள்ளது. செயற்கை நுண்ணறிவு நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறப்போகிறது,'' என்றார். பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பேசுகையில், ''தொழில்துறையின் புதுமை மற்றும் வலுவான ஆராய்ச்சி பண்பாட்டை மாணவர்களிடம் உருவாக்கி வருகிறோம்,'' என்றார். தொடர்ந்து, ' இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' எனும் கருத்தரங்கம் நடந்தது. இதில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் டாக்டர் சுசீந்திரன் பேசுகையில், ''நம் பிரதமர், ஆராய்ச்சிக்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்,'' என்றார். கேள்விகளுக்கு பதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைக் அலீம், கேப் ஜெமினி நிறுவன கார்த்திகேயன், ஐ.பி.எம்., நிறுவன டாக்டர் தினகரன், ஹேவ்லட் பேக்காட் என்டர்பிரைஸ் நிறுவன மதன்குமார் ஆகியோர் பேசினர். மாணவ - மாணவியர் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. கிரேயான் நிறுவனத்தின் மகேஷ், நன்னாரி லேப் நிறுவனத்தின் நவநீதம், எம்.பி., 13 டெக்னாலஜி நிறுவனத்தின் திலிப், நேவிகேட் லேப் நிறுவனத்தின் டாக்டர் நந்திஸ் குமார் ஆகியோர் நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து தெரிவித்தனர். மாணவர்கள் தொழில்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடி,தொழில் வாய்ப்புகள், ஆராய்ச்சி துறையில் முன்னேற்றம் குறித்து விளக்கம் பெற்றனர்.
8 minutes ago
11 minutes ago
13 minutes ago