உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிறைய கட்சிகள் இருப்பதால் சிக்கல் இருக்கத்தான் செய்யும்

நிறைய கட்சிகள் இருப்பதால் சிக்கல் இருக்கத்தான் செய்யும்

இந்தியாவின் அரசியல் நெருக்கடி காலத்துக்கு பின் மாபெரும் மாற்றமும், திருப்பமும் வரக்கூடிய சூழலில், இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வர முடியாது. கோவிலை கட்டி மக்களை மயக்கிவிடலாம் என்ற முயற்சியல் பா.ஜ., வெற்றி பெறாது. 'இண்டியா' கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அப்போது, பா.ஜ., இல்லாத அரசு அமையும். அது கூட்டாட்சி தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் அரசாக அமையும். இண்டியா கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளனர். அதனால், கட்சிகளுக்கு இடையே பிரசனைகள் இருக்கத்தான் செய்யும். அவை சரிசெய்யப்பட்டு விடும். ம.தி.மு.க.,வின் துரை வைகோ திருச்சியில் போட்டியிடப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும், அது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. - வைகோ,பொதுச்செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை