மேலும் செய்திகள்
அத்துமீறி நுழைந்த இருவர் யார்?
24 minutes ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,000 சரிவு
1 hour(s) ago
சென்னை: இந்தியாவில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் முயற்சி செய்து வருகிறார் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வணக்கம் சென்னை எனக்கூறி தனது உரையை துவக்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்த துவக்க விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரதமரின் முக்கிய திட்டமாகும். விளையாட்டுத் துறையில் ஊழலுக்காக மட்டுமே செய்திகளில் இந்தியா இடம்பிடித்து வந்தது. தற்போது, சர்வதேச போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறோம். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு தான் அடித்தளம். இப்போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.தூர்தர்ஷன் பிராந்திய ஒளிபரப்புகளில், டிடி தமிழ் தான் முதல் எச்டி சேனல். 2030, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக பிரதமர் மோடி பெருமுயற்சி செய்து வருகிறார்.விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். இவ்வாறு அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.
24 minutes ago
1 hour(s) ago