கருப்பு கொடி காட்ட முயற்சி
கருப்பு கொடி காட்ட முயற்சி
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்தார். அவரை வரவேற்க சாலையோரத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். பழைய தாலுகா அலுவலகம் அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்ற 'அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு இயக்க' ஒன்றிய செயலர் செந்தில்பெருமாள் என்பவர் தலைமையில் 4 பேர் திடீரென பழனிசாமி வரும்போது கருப்பு கொடி காட்ட முயன்றனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். துரோக அரசியலால் வலுவான இயக்கத்தை வலுவிழக்க செய்ததை கண்டித்தும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ஆகியவற்றை கண்டித்தும் பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.