மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
1 minutes ago
திருப்பூர் :கொங்கேழு சிவ தலங்களில் முதன்மையானதும், 'காசியில் வாசி அவிநாசி' என்ற போற்றுதலுக்கும் உரியது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஸ்ரீபெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்; தேவாரப்பாடல் பெற்றது. கோவில் திருப்பணிகள் நிறைவுற்று, 15 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நேற்று காலை 9:20 மணிக்கு நடந்தது. பெருங்கருணை நாயகி, அவிநாசிலிங்கேஸ்வரர், சுப்பிரமணியர் கருவறை விமான கலசம் மற்றும் மூலவருக்கும், இரண்டு ராஜகோபுரங்களுக்கும், வேதமந்திரங்கள் ஒலிக்க, கும்பாபிஷேகம் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள்.வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், தென்சேரிமலை முத்துசிவராம சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் சாமிநாதன், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் கொடியசைக்க, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., விஜயகுமார், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், தி சென்னை சில்க்ஸ் குழுமத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெலிகாப்டர் மூலம், கோபுரங்கள் மீது மலர்கள் துாவப்பட்டன.
1 minutes ago