உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை பலியிட தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை பலியிட தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கில், 'சம்பந்தப்பட்ட மதத்தினருக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது. சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் 2023 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்கள், எருமைகள், காளைகள், ஆடுகளை சட்டவிரோதமாக ஆண்டுதோறும் திறந்த வெளியில் பலியிடுவது வாடிக்கையாகி விட்டது. பல இறைச்சிக் கூடங்களை உருவாக்கி 'குர்பானி' என்ற பெயரில் கால்நடைகளை பலியிடுவது மற்றும் அதை விற்பனை செய்வது குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன. இச்சமயங்களில் கல்லுாரிகள்கூட தற்காலிக வதைக் கூடங்களாக மாற்றப்படுகின்றன. தனிநபர்களால் கால்நடைகளை சட்டவிரோதமாக பலியிடுவதை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. கால்நடைகளை நாட்டின் பல பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வருகின்றனர். மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் உரிமம் பெற்ற ஒரே ஒரு வதைக் கூடம் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்பு (வதைக் கூடம்) விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.அரசு தரப்பு: திருச்சியில் உரிமம் பெற்று 10 விலங்குகள் வதைக்கூடங்கள் செயல்படுகின்றன. வதைக் கூடங்களை தவிர்த்து பொது வெளியில் கால்நடைகளை பலியிடுவதாக இதுவரை புகார் வரவில்லை. வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மத ரீதியான விழாக்கள் தொடர்பாக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: இது மிகப்பெரிய விவகாரம் தொடர்பானது. ஜூன் 17 ல் பக்ரீத் பண்டிகை வருகிறது. சம்பந்தப்பட்ட சமூகம் அல்லது மதத்தினரின் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளிக்காமல் தற்போதைய நிலையில் இந்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது. சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்மனுதாரர்களாக இணைத்து மனுதாரர் மனு செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 2 வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

A P
ஜூன் 17, 2024 21:21

ஐயா நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். எந்த இடத்தில் வாயில்லாத் பிராணிகளை கொலை செய்யலாம் என்று சட்டம் சொல்கிறதோ ,அங்கு அவற்றை கொன்று தின்னுங்களேன். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் இந்த கொடுஞ்செயலை செய்ய வேண்டாமே. இந்த திருநாட்டில் ஈவு இரக்கம் இல்லாமல் அப்பாவி மிருகங்களை கொலை செய்து சாப்பிடுவதை விரும்பாதவர்கள் கண் முன்னேயே வதை செய்வோம் என்று பிடிவாதம் செய்வது எவ்வளவு கொடுமை என்பது நல்லவர்களுக்குத் தெரியும்.


Sivak
ஜூன் 17, 2024 15:59

ஜல்லிக்கட்டுக்கு சர்வ சாதாரணமாக தடை விதித்த நீதி மன்றங்கள் ... இப்போ மட்டும் பம்முவது ஏன் ... தமிழர் கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவன் மட்டும் ஆட்சி புரிய விடணும் .


Justin Jose
ஜூன் 16, 2024 11:00

அவரவர் விருப்பத்திற்கு சாப்பிடட்டுமே..


சித்தறஞ்சன்
ஜூன் 14, 2024 17:32

கிறிஸ்தவர்களுக்கு மற்றும் இஸ்லாமியர்களுக்கோ சாதகமாக நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்லும் பொழுது உங்களுக்கு இனிக்கின்றது. இந்துக்களின் அதாவது மதம் சார்ந்த வழக்குகளில் இந்துக்களுக்கு சார்பாக தீர்ப்பு வந்தால் உங்களுக்கு வயிறு பற்றி எரியும்


Alagusundram KULASEKARAN
ஜூன் 14, 2024 17:00

சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்போதுமே சரியான நீதி கிடைக்காது


chails ahamad
ஜூன் 14, 2024 15:32

இதுபோன்ற வழக்குகளை தடை செய்வதே மேலாகும், காலம் காலமாக அண்ணன், தம்பிகளாக, உற்றார், உறவுகளாய், மத நல்லிணக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையெல்லாம், பிரித்தாள முனைகின்ற கபடங்களே தேவையற்ற வழக்காகும், தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி, அமைதியான தமிழகத்தை சீர் குலைக்க முனைகின்ற செயல்கள் இவைகளாகும்.


Rahu
ஜூன் 14, 2024 14:34

கோயில் வருசம் புள்ளளா வெட்டுரேயே தம்பி


பெரிய ராசு
ஜூன் 17, 2024 19:17

க்ரிப்டோ கு ...திருந்துங்க


Svs Yaadum oore
ஜூன் 14, 2024 14:17

இப்போது எல்லோரும் ஐரோப்பாவாக மாறி விட்ட தமிழ் நாட்டில் ... கறி திங்க வேண்டும் ...


vidhu
ஜூன் 14, 2024 13:22

ஹிந்துக்களுடைய பண்டிகைகளுக்கு பொருந்துமா இந்த தீர்ப்பு. நீதி கூட மதம் சார்ந்துதான் தீர்ப்பு கிடைக்கறது


S MURALIDARAN
ஜூன் 14, 2024 13:16

எந்த காரணத்திற்காகவும் உயிர் பலி கூடாது. அவைகள் வாயில்லா பிராணிகள் ஆக இருப்பதால்தான் கேடுகெட்ட மனித இனம் தங்கள் கொண்டாட்டத்திற்கு அவைகளின் சதையை உண்கின்றது. இறைவன் படைத்த எந்த உயிரையும் மாய்க்க எவருக்கும் அதிகாரமில்லை. அத்தகைய அதிகாரம் இயற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. கேவலம் ஒட்டு வங்கிக்காக ஒரு சட்டம். அகிம்சையை போதிக்கும் நாட்டில் ஒரு அராஜக சமுதாயத்திற்கு துணை போகும் சட்டம், நீதிமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள். "அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்". இது சத்தியம் நடந்தே தீரும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை