மேலும் செய்திகள்
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
27 minutes ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
35 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
38 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
46 minutes ago
அரியாங்குப்பம் : கனவாய் மீனை பிடிக்கும் அக்னி கூக்கான் வலையை பயன்படுத்திய கடலுார் பகுதி மீனவர்களை புதுச்சேரி மீனவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார், தாழங்குடா மீனவர்கள் சிலர் அக்னி கூக்கான் என்ற வலையை பயன்படுத்தி, புதுச்சேரி வீராம்பட்டினம் கடல் பகுதியில் கனவாய் மீன்களை பிடித்து வந்தனர்.இதனால், வீராம்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க வலை விடும் போது, அக்னி கூக்கான் வலைகள் இடையூறாக இருந்ததுடன், வலைகளை சேதப்படுத்தி வந்தன.இதுகுறித்து வீராம்பட்டினம் மீனவர்கள் மீன்வளத்துறை இயக்குனரிடம் புகார் தெரித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று தாழங்குடாவை சேர்ந்த 7 பேர் படகில் அக்னி கூக்கான் வலையை பயன்படுத்தி வீராம்பட்டினம் கடல் பகுதியில் மீன் பிடித்தனர். அவர்களை வீராம்பட்டினம் மீனவர்கள் ஒன்று திரண்டு, சிறைப்பிடித்து வீராம்பட்டினத்திற்கு அழைத்து வந்தனர்.அதையடுத்து, புதுச்சேரி, கடலுார் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவர்கள், முக்கிய நிர்வாகிகளை, அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், அக்னி கூக்கான் வலையை வீராம்பட்டினம் பகுதியில் பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் கூறியதை ஏற்று, சிறை பிடித்த மீனவர்களை விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
27 minutes ago
35 minutes ago
38 minutes ago
46 minutes ago