உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை சின்னத்தில் போட்டி! ஓபிஎஸ்.,க்கு யார் கொடுத்த தைரியம்?

இரட்டை இலை சின்னத்தில் போட்டி! ஓபிஎஸ்.,க்கு யார் கொடுத்த தைரியம்?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக.,வில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடப்போவதாக கூறிவருகிறார். ஆனால், இரட்டை இலை சின்னம் தற்போது அதிமுக வசம் இருப்பதால், ஓபிஎஸ் அந்த சின்னத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என நீதிமன்றங்களும் ஏற்கனவே தெரிவித்துள்ளன. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி என உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்,க்கு யார் தைரியம் கொடுத்தது என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://youtu.be/q6_Tj0X1_2I


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ