மேலும் செய்திகள்
மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 80
அரியலுார் - நாமக்கல் ரயில் பாதை சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு
6 hour(s) ago | 1
மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி
6 hour(s) ago
சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால், தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தன் கூட்டணிக்கு கட்சிகளை இழுப்பதற்காக, கூட்டணி ஆட்சி என்றும் விஜய் அறிவித்துள்ளார்.தேர்தலுக்கு இன்னும் சில மாதமே இருக்கும் வேளையில், பிரசாரம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சியினர் தொடங்கி விட்டனர். அந்த வகையில், முதல் ஆளாக, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த 5 பேர் கொண்ட குழுவை, காங்கிஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சூரஜ், எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, கடந்த டிச.,03ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினர்.இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமான தலைவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியுள்ளார்.2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவுடனான பேரத்தை அதிகரிப்பதற்காக, காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு இந்த சந்திப்பை நடத்தியிருக்கலாம் ; ஆனால், தவெகவுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியின் சந்திப்பை, திமுகவினர் எப்படி எடுத்துக் கொள்வர் என்பது போகப்போக தெரியும் என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.பின்னணி
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 41 இடங்களில் 8ல் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் ஒரு காரணமாக அமைந்தது. எனவே, காங்கிரசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவதில் கவனமாக இருந்த திமுக, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் 25 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. அதில், 18ல் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியினருக்கு திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற்று, போட்டியிட வேண்டும் என்ற ஆசையை தூண்டியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே, காங்கிரஸ் கட்சியினரின் கூட்டங்களில், கூடுதல் இடங்களைப் பெற வேண்டும்; ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற முழக்கங்கள் முன்வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
4 hour(s) ago | 80
6 hour(s) ago | 1
6 hour(s) ago