உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு: முகேஷ் அம்பானி பெருமிதம்

தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு: முகேஷ் அம்பானி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. தமிழகம் எப்போதுமே தொழில், கலாசாரத்திற்கு சிறந்த மாநிலம். தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு செய்வோம்'' என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காணொளி வாயிலாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=czk0qm2t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ரூ.35 ஆயிரம் கோடி

தமிழகம் எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம். 1300 சில்லறை விற்பனை அங்காடிகள் ரிலையன்ஸ் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், இங்குள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் இருக்கும் 35 மில்லியன் சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் புரட்சியின் மூலம் கிடைத்துள்ள பலன்களை வழங்குவோம்.

5ஜி தொழில்நுட்பம்

ஏஐ, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் அதிவிரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜியோ நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனம் கனடாவின் Brookfield Assest Management மற்றும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட Digital Reality ஆகியவற்றுடன் கைக்கோர்த்து உலகத்தரத்தில் டேட்டா சென்டரை தமிழகத்தில் அடுத்த வாரம் திறக்க உள்ளது.

தமிழக அரசு ஆதரவு

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும். நிலையான வளர்ச்சியை ஊக்குவித்து காலநிலை மாற்றத்தால் நமது பூமியை காக்க தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றுவோம். எங்களது கொள்கைகள் மூலம் எடுக்க இருக்கும் முன்னெடுப்புகளுக்கு தமிழக அரசின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramesh Sargam
ஜன 08, 2024 01:09

நான் சிறிது குழப்பத்தில் இருந்தேன், தமிழகத்தில் ஒரு திமுக ஊழல் ஆட்சி நடக்கிறது என்று தெரிந்தும், முதாலீட்டாளர்கள் எப்படி அங்கே முதலீடு செய்து தொழில்துவங்க முன்வருகிறார்கள் என்று. பிறகு யோசித்தபோது புரிந்தது, இந்த திமுக ஊழல் ஆட்சி இன்னும் ஒரு சில வருடங்கள் மட்டுமே. பிறகு அங்கு தாமரை ஆட்சி மலரும். அப்பொழுது நம் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று கருதி, அம்பானி போன்றவர்கள் பணத்தை கோடிக்கணக்கில் முதலீடு தமிழகத்தில் செய்கிறார்கள். அவர்கள் முதலீடு வீண் போகாது, தாமரை ஆட்சி வந்தபிறகு.


Vijay D Ratnam
ஜன 07, 2024 23:16

ஹலோ அம்பானிஜி, எத்தனை தடவை 40 பர்சென்ட் கமிஷன கொடுத்துட்டே இருப்பீங்க. எங்க தமிழ்நாட்டுல மொத்தமா ஆறு கோடி வாக்காளர்கள் இருக்கோம். எப்படியும் நான்கரை கோடி பேர் ஒட்டு போடுவோம். அதிலிருந்து கரெக்ட்டாக ஒரு மூன்றரை கோடி பேரை செலக்ட் செய்து தலைக்கு பதினைந்தாயிரம் ரூவா என்று கொடுத்தா மொத்தமா 52500 கோடி ரூவாதான் செலவு ஆகும். வாங்கஜி, வந்து இன்வெஸ்ட் செய்தால் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு ஒங்களுக்குத்தான். எங்களுக்கு தேவை பணம் பாட்டில் பிரியாணி குடம், கொலுசு குந்தாணி அம்புட்டுதேன். ஒக்கார போவது நாயா நரியா, படித்த மேதையா படிப்பறிவில்லாத தத்தி தற்குறியா இதெல்லாம் எங்களுக்கு பிரச்சினையே இல்லை. சார்ட்டட் பிளைட்ல வந்தா என்ன திருட்டு ரயிலேறி வந்தா என்ன. எங்களுக்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.


Sankar Ramu
ஜன 07, 2024 19:09

திமுகவை விலைக்கு வாங்கிட்டாரா அம்பானி? ????????


தமிழன்
ஜன 07, 2024 21:32

சில திமுகக தலைகள் அவரிடம் பணம் கொடுத்து வைத்து இருக்கிறார்கள்.


rajasekaran
ஜன 07, 2024 18:05

பெரிய பெரிய மால்கல் வரும்போது இந்த விக்கிரமராஜா என்ன சொன்னான், செட்டியார் கடை அண்ணாச்சி கடை எல்லாம் என்ன ஆவது என்று இதே வாய் தான் கேட்டது. இப்போது பேசாமல் இருக்கிறார்.


V GOPALAN
ஜன 07, 2024 17:05

Dear Amababiji, if you remember when you wanted to start Supply Chain like Amazon and when you tried to acquire all cinema theatres, this DMK stopped your plan. You also said you will directly procure from farmers to change Tamilnadu economy. Later Sun Family purchased all theaters . Please do not come to Tamilnadu Go to Sri City Andhra


Barakat Ali
ஜன 07, 2024 16:49

எப்படி பேசுனா பெரிய தத்தி க்கு குளுகுளு ன்னு இருக்குமோ அப்படி பேசிட்டாரு ........


திகழ்ஓவியன்
ஜன 07, 2024 21:14

எப்படி பேசுனா உனக்கு நவ துவாரம் எரியுமோ அப்படி அம்பானி பேசிட்டாரு ........ ...


Palanisamy Sekar
ஜன 07, 2024 16:26

கம்யூனிஸ்டுகள் வாயில் பசைபோட்டு ஒட்டிக்கொண்டு பேசாதிருப்பார்கள். ஏன் மோடியின் ஆதரவு பெட்ரா அம்பானி என்று இப்போது கூப்பாடு போட்டுப்பாருங்களேன். அம்பானிசாருக்கு இப்போது வெல்லக்கட்டியாக இனிக்கும்தான்..போகப்போக இந்த உப்பிஸ் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாமல் பின்னங்கால் பட ஓடிப்போவார் புலம்பிக்கொண்டே..


Balasubramanyan
ஜன 07, 2024 16:19

How much cutting,commission he paid . It is rule in Tamilnadu.


Bala
ஜன 07, 2024 15:33

Big Bazaarஐ எதிர்த்த விக்ரம் ராஜா இப்பொழுது ஏன் மவுனம்??


Barakat Ali
ஜன 07, 2024 19:34

பிக் பஜார் பல இடங்களில் ரிலையன்ஸால் வாங்கப்பட்டு விட்டது .......


Bala
ஜன 07, 2024 21:06

Am aware of that. I was mentioning when Big Bazaar started in TN decades back these guys where opposing it. What has changed now for them to be silent - His son has now become a DMK MLA in the same constituency where Big Bazaar started their first outlet in Chennai.


Bala
ஜன 07, 2024 15:30

அம்பானி , அதானிக்கான சர்க்கார் என்று கூக்குரலிட்ட திராவிட சிந்தனையாளர்கள் எங்கே?? முழங்கிய ராகுல் எங்கே?? ரூ 20 கோடி எங்கே??


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை