உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணி நியமனத்தில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு விடணும்

பணி நியமனத்தில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு விடணும்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2,538 உயர் பதவிகளுக்கான தேர்வு மற்றும் நியமனத்தில் ஏறக்குறைய ரூ.888 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், ஹிந்து அறநிலையத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடந்த பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஓராண்டுக்கு முன்பு, தென்காசியில் ரேஷன் கடை ஊழியர் நியமனத்தில், தி.மு.க., மாவட்ட செயலர் அளித்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டது. அதை வெளிப்படுத்தியதும் கலெக்டர் பட்டியலை ரத்து செய்தார். தற்போது நகராட்சி நிர்வாக துறையில், 2,538 பணியிடங்களுக்கு, ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்ட பின்னரே, பணி நியமனங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். - கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ