| ADDED : மே 15, 2024 06:18 PM
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சங்கமம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்துள்ளதாக வந்த புகார் எழுந்தது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருச்சியில் உள்ள ஆய்வுத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி கரம்பக்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும், ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.