உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  புதிய பணியிடங்கள் போலீசில் உருவாக்கம்

 புதிய பணியிடங்கள் போலீசில் உருவாக்கம்

சென்னை : குற்றம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என, அழைக்கப்படும் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகளுக்கு உதவி செய்ய, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, திருச்சி மற்றும் சேலம் அலுவலகத்தில் புதிதாக சட்ட ஆலோசகர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. காவலர் வீட்டுவசதி கழகத்தில் முதன்மை நிர்வாக அதிகாரி பணியிடமும், சென்னை மாநகர போலீசில் நிதி கட்டுப்பாட்டாளர் பணியிடமும், காவலர் நலன் மற்றும் எஸ்டேட் என்ற பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொருளாதார குற்றப்பிரிவில், மேற்கு மண்டல எஸ்.பி., மற்றும் திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் எஸ்.பி., என, ஆறு வகையான புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. சி.பி.சி.ஐ.டி., பிரிவில், எஸ்.பி.,க்கள், ஒன்று, இரண்டு மூன்று என்று இருந்த நிலையை மாற்றி, வடக்கு, தெற்கு, மத்திய மண்டல எஸ்.பி.,க்கள் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கான எல்லைகளும் வகுக்கப்பட்டு உள்ளன என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை