உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பட்டியலினத்தவர் மீதான குற்றங்கள்: தி.மு.க., கூட்டணி கட்சிகள் கப்சிப்

 பட்டியலினத்தவர் மீதான குற்றங்கள்: தி.மு.க., கூட்டணி கட்சிகள் கப்சிப்

தி.மு.க., ஆட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், வி.சி., தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூ., கட்சிகள் மவுனம் காப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய குற்ற ஆவண மையத்தின், 2023ம் ஆண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் 1,377 குற்றங்கள்; 2022ல் 1,761 குற்றங்கள் என பதிவாகி இருந்தன. கடந்த 2023ம் ஆண்டில் மேலும் அதிகரித்து, 1,921 ஆக உயர்ந்தது. அந்த ஆண்டில், 74 பட்டியலினத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 135 பட்டியலின பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வழக்குகளை முறையாக நடத்தாமல், 37.7 சதவீதம் நிலுவையில் இருப்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 66 கலவரங்கள், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக நடந்துள்ளன. இந்த விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் மட்டுமே, 'பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவதில், தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை' என, குற்றஞ்சாட்டி அறிக்கை விட்டிருந்தார். ஆனால், பட்டியலின தலைவர்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படும் வி.சி., தலைவர் திருமாவளவன் எதுவும் கூறவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் போன்றவை மவுனம் காத்து வருகின்றன. மேலும், இதை கண்டிக்க வேண்டிய அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வாய் எதுவும் திறக்கவில்லை. இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகள் அனைத்தும் மவுனம் காப்பது, பட்டியலின மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை