உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: பதவி கிடைக்கலைன்னா டாட்டா காட்டிட்டு போயிடுவீங்களோ

டவுட் தனபாலு: பதவி கிடைக்கலைன்னா டாட்டா காட்டிட்டு போயிடுவீங்களோ

நடிகை கவுதமி:

நான், 25 ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருந்துள்ளேன். சமீபத்தில், சில காரணங்களுக்காக அக்கட்சியில் இருந்து விலகி வந்தேன். தற்போது, சரியான நேரத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது; பொறுப்பு அளித்தால், களம் இறங்கி வேலை செய்வேன். ஜெயலலிதா என் மனதில் என்றும் உள்ளார்.

டவுட் தனபாலு:

கடந்த சட்டசபை தேர்தல்ல, ராஜபாளையம் தொகுதியில, 'சீட்' கிடைக்காத விரக்தியில தான், பா.ஜ.,வில் இருந்து வெளியே வந்தீங்க... அ.தி.மு.க,விலும், பதவி, பொறுப்பு கிடைக்கலைன்னா, அங்கயும், 'டாட்டா' காட்டிட்டு போயிடுவீங்களோ என்ற, 'டவுட்' வருதே!---

பத்திரிகை செய்தி:

கூட்டணி குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் மண்டல வாரியாக ஆலோசனை நடத்தினார் நடிகர் கமல். அப்போது, மதுரை மண்டல நிர்வாகிகள், கமல் பிறந்த பரமக்குடி உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என, அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் சிரிப்பை மட்டும் கமல் பதிலாக தந்திருக்கிறார். இதனால், 'சரி என்கிறாரா; பார்க்கலாம் என்கிறாரா' என்ற குழப்பம் கட்சியினருக்கு ஏற்பட்டது.

டவுட் தனபாலு:

அவர் வாய் திறந்து பேசினாலே, எதுவும் புரியாம சிண்டை பிய்ச்சுக்கணும்... இதுல, பேசாம வேற இருந்தா, கேட்கவே வேண்டாம்... தேர்தல் முடியுறதுக்குள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தலையில முடி இருக்குமா என்பது, 'டவுட்'தான்!---

பா.ம.க., தலைவர் அன்பு மணி:

எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்க்காமல், தன் சொந்த நிதியில் இருந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு உதவ வேண்டும்.டவுட் தனபாலு: போன வாரம் தான், மழை, வெள்ளத்துக்கு காலநிலை மேல பழியை போட்டாரு... இப்ப, மத்திய அரசுக்கு ஆதரவாக மாத்தி பேசுறாரே... பா.ஜ.,வுடன் கூட்டணி உறுதியாகிடுச்சு என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

K.Ramakrishnan
பிப் 17, 2024 17:46

இருபத்தைந்து வருஷமாக ஒரு ஹீரோயின் பா.ஜனதாவில் இருந்தது இப்ப தான் தெரிஞ்சுது. இவராலும் பா.ஜனதாவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கல.


Sivagiri
பிப் 16, 2024 11:18

ஐயோ , 25-வருஷமா இருந்துச்சா ? எந்த மூலையில் ? இந்த மாதிரி வேஸ்டேஜ் லக்கேஜ் எல்லாம் தூக்கி வீசிருக்க வேண்டாமோ - சரீ , ஒரு வேளை இது மநீம தலைவரோட ப்ளானா இருக்கலாம் , ஸ்பை வேலை பார்க்க ?


Rajarajan
பிப் 16, 2024 10:01

சரி விடுங்க. எதிர்காலத்தில், எப்படியும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியாவது தரமாட்டாங்களானு ஏங்கறது நியாயம் தானே. அதை வெளிப்படையா சொல்றத விட்டுட்டு, அரசியல்வாதிகள் மக்கள் சேவை, மகேசன் தொண்டு, ஏழைக்கு உழைக்கறேன்னு உருட்டறது தான் சகிக்கல.


V GOPALAN
பிப் 16, 2024 09:14

In 2026, please join with Kamalahasan he will give you paramakudi area


சந்திரன்,போத்தனூர்
பிப் 16, 2024 08:40

விலை போகதவர்கள் எல்லாம் விலை போகுமிடம் எடப்பாடியின் அதிமுக.


SRIDHAAR.R
பிப் 16, 2024 08:28

நடிகை கட்சியில் சேர்வதால் இரண்டு ஓட்டு நிச்சயம் அதிமுக விற்கு


ramani
பிப் 16, 2024 07:34

என்ன அடுத்தது திமுகவை காங்கிரஸா எந்த கட்சியை தேர்ந்தெடுத்த உள்ளீர்கள் சேர


Matt P
பிப் 16, 2024 06:44

மத்திய அரசை எதிர்பார்க்காமல், தன் சொந்த நிதியில் இருந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ...staalin appaa chmbathichu avaru pullai vaichirukkum chontha nithiyila irunthaa?


Ramesh Sargam
பிப் 16, 2024 06:31

நடிகை கவுதமி அவர்களே, பேசாமல் நீங்களே ஒரு கட்சி துவங்குங்கள். அதற்கு விருப்பப்பட்டால், ஆட்சேபனை இல்லையென்றால் "பாதிக்கப்பட்ட நடிகைகள் நீதி மையம்" அல்லது "பாதிக்கப்பட்ட மகளிர் நீதி மையம்" என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.


RAJ
பிப் 16, 2024 06:09

Ramesh, your comment is funny. Keep up.


Ramesh Sargam
பிப் 16, 2024 07:38

I think you are talking about me. Thank you.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை