மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 24
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்குகளின் விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.விழுப்புரம் மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் கடந்த 2022ம் ஆண்டு பிப்.28, ஜூலை 25 மற்றும் செப்.18ம் தேதிகளில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகம் மற்றும் சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆகியோர் தமிழக அரசையும், முதல்வரையும் அவதுாறாக பேசினார்.இதுதொடர்பாக விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் தொடரப்பட்ட மூன்று வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது சண்முகம் மற்றும் சக்கரபாணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் வரை சாட்சி விசாரணையை ஒத்தி வைக்க கோரினர்.அதனை ஏற்ற நீதிபதி, வழக்குகளின் விசாரணையை வரும் பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
4 hour(s) ago | 24