உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல் வந்தே மெட்ரோ ரயில் மும்பைக்கு சென்றதால் ஏமாற்றம்

முதல் வந்தே மெட்ரோ ரயில் மும்பைக்கு சென்றதால் ஏமாற்றம்

சென்னை: சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, முதல், 'வந்தே மெட்ரோ' ரயில் மும்பையில் இயக்கப்பட உள்ளது.சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., ஆலையில், இந்த ரயில் ஜூலையில் தயாரிக்கப்பட்டது. 150 கி.மீ., முதல் 200 கி.மீ., துாரம் வரை உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக தயாரிக்கப்பட்டது. 12 பெட்டிகள் உடைய இந்த ரயிலில், 'ஏசி' வசதி, உள்அலங்காரம், சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் உண்டு.இந்த ரயிலை, இம்மாதம், 3ம் தேதி சென்னை -- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே, மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதனால், சென்னை - காட்பாடி அல்லது திருப்பதி, சென்னை - புதுச்சேரி இடையே இயக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த ரயிலை மும்பைக்கு அனுப்பியது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை