உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நரிக்குடி அருகே திருவாரூர் மாவட்ட தி.மு.க., நகர செயலர் வெட்டிக் கொலை

நரிக்குடி அருகே திருவாரூர் மாவட்ட தி.மு.க., நகர செயலர் வெட்டிக் கொலை

நரிக்குடி : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பூவாக்கனியில், திருவாரூர் மாவட்ட தி.மு.க., நகர செயலர் பன்னீர்செல்வம், 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், தண்டத்தோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 56 . பேரளம் தி.மு.க., நகர செயலராக உள்ள இவர், அங்கு நடந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். போலீசாரும் தேடிய நிலையில் ,கடந்த நான்கு நாட்களுக்கு முன், நரிக்குடி பூவாக்கனியை சேர்ந்த உறவினர் ராமு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல், வீட்டில் தூங்கிய பன்னீர்செல்வத்தை வெளியே அழைத்து, அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. கிராமத்தினர், அவரை திருச்சுழி மருத்துவமனை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நரிக்குடி இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி