உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை ராமேஸ்வரத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

நாளை ராமேஸ்வரத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை:தி.மு.க. தலைமை அறிக்கை:கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன.இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.பிரதமருக்கு 9 கடிதங்களும் வெளியுவுறத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையாடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.மத்திய அரசை கண்டித்து நாளை 11ம்தேதி காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி