உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்லாக்காசுக்கு சரண் அடைந்த தி.மு.க.,: சொல்கிறார் சீமான்

செல்லாக்காசுக்கு சரண் அடைந்த தி.மு.க.,: சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க.,வை யார் எதிர்த்தாலும் அவர்களை சங்கி என்று கூறி விடுகின்றனர். உண்மையில், பா.ஜ.,வின் 'பி' டீம் தி.மு.க., தான்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: எங்களுடன் கூட்டணி வைப்பது குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். செப்டம்பர் மாதம் விஜய் கட்சி பணியை துவங்குகிறார். வேளாண்மை அரசு பணி என நான் சொன்னால் சிரிக்கின்றனர். வேளாண்மை குறித்து பில்கேட்ஸ் பேசினால் பேசும் பொருள் ஆகுகிறது.

கோபம் என்னாச்சு?

தி.மு.க.,வை யார் எதிர்த்தாலும் அவர்களை சங்கி என்று கூறுகின்றனர். உண்மையில், பா.ஜ.,வின் 'பி' டீம் தி.மு.க., தான் பட்ஜெட்டில் தமிழத்தின் பெயர் இல்லை; நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தார். அப்பா பெயரில், 100 ரூபாய் காசு வெளியிட்டதும் கை குலுக்கிக் கொண்டாடுகின்றனர். அவ்வளவு தானா உங்க கோபம்? 100 ரூபாய் செல்லாக்காசுக்கு சரண் அடைந்து விட்டீர்கள்.

அவதூறு கருத்து

அண்ணா பல்கலையில் நடந்த முறைகேட்டை, அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வரவிட்டால் யாருக்காது தெரிந்து இருக்குமா? கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரம் ரூபாய் தவிர வேற ஏதாவது அரசு செய்தது உண்டா? திருச்சி எஸ்.பி., வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும், எனக்கும் தொடர்பில்லை. சமூக வலைதளத்தில் ஆபாசமாக எழுதியவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன்.

இழிவு

என்னையும், என் குடும்பத்தாரையும், என் கட்சி பெண்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். எனது குடும்பத்தை பற்றி சமூகவலைதளத்தில் ஆபாசமாக எழுதியதை எல்லாம் நான் கடந்து செல்கிறேன். வருண் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்று சொல்லலாமா? இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K. Loganathan Kanthan
ஆக 19, 2024 08:50

நீங்களும் இப்போஇப்போ ........


பல்லவி
ஆக 18, 2024 22:36

புது மொழி “சொந்த நாணயத்தில் சூனியம் வைப்பது என்பது”


அப்பாவி
ஆக 18, 2024 21:09

திமுக வா? பா.ஜ வா சரணடைஞ்சது?


Avudaiappan S
ஆக 19, 2024 10:06

நிச்சயமாக பாஜக இருக்காது


Sivagiri
ஆக 18, 2024 19:52

காந்தி இருந்த இடத்தில் கருணாநிதியா - என்று கேட்க மாட்டாரா ? . .


Mr Krish Tamilnadu
ஆக 18, 2024 17:54

100 ரூபாய் நோட்டை நிறுத்த போறாங்க ளா?.1௦௦ ரூபாய் காயின் வருது. 10 ரூபாய் நோட்டு பிரச்சனையே, பெறும் பிரச்சனையாக உள்ளது. காயின் எல்லாம், பாக்கெட்டில் உள்ள போன், கண்ணாடியை பதம் பார்க்கிறது என நாணயம் பாக்கெட்டில் வைக்க யோசிக்கும் மக்கள். 10 முதல் அதற்கு மேல் மதிப்புள்ள வெயிட்டான காயின்களை அதிகம் பயன்படுத்துவது இல்லை. அதனால் தான் செல்லக்காசு என்கிறீர்களா சீமான் அவர்களே...


Yasararafath
ஆக 18, 2024 15:36

100ரூபாய் நாணயம் வெளியீட்டால் சீமானுக்கு என்ன பிரச்சனை.


RAMESH
ஆக 18, 2024 15:57

அதற்கு சங்கி டெல்லியில் இருந்து வருகிறாரே,.....இப்போது மட்டும் பாஜக இனிக்கிறதூ


Avudaiappan S
ஆக 19, 2024 10:05

நாணயம் இல்லாதவர்க்கு நாணயமா?


Kasimani Baskaran
ஆக 18, 2024 14:51

உடன்பிறப்புக்கள் திடீர் என்று சங்கியாகவேண்டிய கட்டாயத்தை அந்த நூறு ரூபாய் நாணயம் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் யாரைப்பார்த்தாலும் சங்கியாகத்தெரிவது ஒரு வகை பிராந்தி. அதற்க்கு மருந்து கிடையாது.


அரசு
ஆக 18, 2024 14:46

இவரே ஒரு செல்லாக்காசு. ஆகவே தான் நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அலைகிறார்.


Avudaiappan S
ஆக 19, 2024 10:08

நாம் தமிழர் கட்சியை போன்று திமுக தனித்துப் போட்டியிடுமா? அந்த தைரியம் திமுகவுக்கு இல்லை.


தமிழன்
ஆக 18, 2024 14:14

ஒரே ஒரு நூறு ருபாய் மட்டும் தான் வெளியிடுவாங்களா..?


தமிழன்
ஆக 18, 2024 14:13

ரூபாய் நோட்டில் காந்தி படம் தான் தானே இருக்கு. அதை இன்னும் மாற்றவில்லையே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி