உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "மிதமாக குடிங்க"- கமல் அட்வைஸ் சரியா ?

"மிதமாக குடிங்க"- கமல் அட்வைஸ் சரியா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: ‛‛ குடிக்காதே என அறிவுரை சொல்வதை விட , மிதமாக குடியுங்கள் என வேண்டுமானால் சொல்லலாம், உயிர் தான் முக்கியம் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கமல் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடமை

இந்த தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ விமர்சனமாகவே பார்க்கக்கூடாது. அனைவருக்கும் கடமை உள்ளது. வள்ளுவர் காலத்தில் இருந்தே மது உள்ளது. இதில் இருந்து மீள்வதற்கான வழிகளை சொல்லி கொடுக்க வேண்டும். சாராய வியாபாரத்தை செய்யும் எந்த அரசாக இருந்தாலும், அதில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை கண்டிப்பாக விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வேண்டும். சாலை விபத்து நடப்பதால் வாகன போக்குவரத்தை நிறுத்த முடியாது. வாகன வேகத்தை குறைக்க முடியாது. இதனால் தான் எக்ஸ்பிரஸ்வே ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அறிவுரை

தொழிற்சாலைகளில் பெரிய அளவில் மது தயாரிக்கிறார்கள். அதற்காக கடைகளை ஏற்படுத்தி உள்ளனர். ஒரு தெருவில் இருக்க வேண்டிய மருந்துக்கடைகளை விட , அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன. குடிக்காதே எனும் அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள். உங்கள் உயிர் தான் முக்கியம் என அறிவுரை செய்யலாம். இது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் டாஸ்மாக் கடை அருகில் இருக்க வேண்டும்.

பாடம்

இதை தவிர மருந்து இருப்பதாகவோ, இழுத்து மூடினால் சரியாகிவிடும் என்பது எல்லாம் தவறான கருத்து. இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணம் உள்ளது. அமெரிக்காவில் மதுக்கடைகள் இருக்கிறது. இதுவே இதற்கு சிறந்த உதாரணம். மதுவிலக்கு கொண்டு வந்த போது , மாபியாக்கள் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை. இதுதான் உலகம் கற்றுக்கொண்ட பாடம். இதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

விமர்சனமா

இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்ய வேண்டுமா அதை செய்துள்ளது. இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது. விமர்சனம் செய்யலாம். ஆனால், எத்தனை அரசுகளை செய்ய முடியும். இதற்கு எல்லாம் காரணம் பல அரசுகள். இவ்வாறு கமல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

NATARAJAN R
ஜூன் 26, 2024 16:24

கமல் அவர்களே ஒரு ராஜ்யசபா எம்பி பெற கேவலம் இந்த அளவு நீங்கள் தரம் தாழ்ந்து போக வேண்டாம். அரசியல் நீங்கள் ஜெயிக்க முடியாது அது அனைவரும் அறிந்தது. ஆனால் ஒரு கிராமத்தில் ஏராளமான உயிர்கள் கள்ளச்சாராய சாவில் பலியாகி அதற்கு காரணம் அங்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை ஒவ்வொரு வீட்டிலும் கோலமிட்டு தெரியப்படுத்துகிறார்கள். ஆனால் அரசு அந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இதை தட்டிக் கேட்க உங்களுக்கு தைரியம் இல்லை. எங்களுக்கு ஒன்று நன்றாக புரிகிறது. ராஜ்யசபா எம்பி பதவி மீது உங்களுக்கு எந்த அளவு மோகம் இருக்கிறது என்று. தயவு செய்து நீங்கள் இனியும் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்காதீர்கள். எல்லோரும் ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். கட்டைகளை வைத்து. ஆனால் நீங்கள் திரு சீமான் சொன்னது போல தலையை வைத்து முட்டுக் கொடுக்கிறீர்கள். உங்கள் பேச்சு ஒரு கட்சியின் தலைவர் பேசுவது போல அல்ல மாறாக திமுகவின் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் பேசியது போல இருக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு.


Ramaswamy Jayaraman
ஜூன் 26, 2024 13:35

நல்ல கருத்து. இவரை போல் நல்லவர்கள் நால்வர் இருப்பதால் தான் நாடு இந்த இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. குடிகாரர்களிடம் கருத்து கேட்டால், வேறு என்ன பேசுவார்.. இவர் நடிப்பதோடு நிறுத்திக்கொண்டால், நாடு நலம் பெறும்


Easwar Kamal
ஜூன் 25, 2024 17:25

குடிக்காமல் இருப்பவர்கள் இதை கடந்து சென்று விடலாம். கமல் போதனை மடா குடியன்களுக்குத்தான்.


Narayanan
ஜூன் 25, 2024 16:18

கமல் சரியாத்தான் சொல்றார்.


chandu
ஜூன் 25, 2024 13:01

பல அரசுகள், ஆனால் ரெண்டே கட்சிகள்


xyzabc
ஜூன் 25, 2024 12:43

another unfortunate human being for TN


Nagercoil Suresh
ஜூன் 25, 2024 07:42

கிராமங்களில் கூறுவது போல கறிக்கு ஒரு கோழி பிடிப்பது தவறா என கேட்டது போல் உள்ளது கமலின் கருத்து...மிதமாக குடியுங்கள் என மிதமாக கூறி இருக்கிறார், கள்ளக்குறிச்சியில் குடித்தது கள்ள சாராயம் என்பதை மறந்து விட்டு பேசுகிறார். தற்போதய உலகில் மதுவிலக்கை முழுவதுமாக ஒழிக்க முடியாது என்பது தான் நிதர்சனம் ஆகவே தான் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதை பலர் பின்பற்றுவது கிடையாது எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பொருள்...


seshadri
ஜூன் 25, 2024 06:29

எதாவது எதிராக சொன்னால் ராஜ்ய சபா எம் பி பதவி கிடைக்காது. அதனால் இப்படித்தான் பேசுவான் இந்த டி எம் கே அடிமை. இவனே ஒரு குடிகாரன் இவன் எப்படி குடிக்காதே என்று சொல்லுவான்


Rajagopalan R
ஜூன் 24, 2024 18:35

அவர் கள்ள சாராயத்தை சொல்லியே இருப்பஆர் . நீரில் மிதப்பவங்க பாட்டு


ASHOK DHARSHINI
ஜூன் 24, 2024 11:38

நீ வந்து செய்யவேண்டியது தானே, டாஸ்மாக் வேணாம் எந்த கோவெர்மெண்ட் சொல்லுதோ அதே கோவெர்மென்ட் நடத்துது, நீ செய்யல இல்ல, அது இதுன்னு பேசாதே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை