உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர் சேர்க்கையில் இரட்டை பதிவா: கண்காணிக்க உத்தரவு

மாணவர் சேர்க்கையில் இரட்டை பதிவா: கண்காணிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு முடியும் முன்னரே, மார்ச், 1ம் தேதி முதல், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. மாவட்ட வாரியாக தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது.நேற்று முன்தினம் நிலவரப்படி, 5ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளில், 90,259 பேர்; எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளில், 40,451 பேர் என, 1,30,710 பேர் சேர்ந்துள்ளனர்.ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான உயர், மேல்நிலை பள்ளிகளில், 15,285 பேர் சேர்ந்துள்ளனர். மொத்தமாக அரசு பள்ளிகளில், 1,45,995 பேர் புதிதாக பதிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.இதற்கிடையில், மாணவர் சேர்க்கையை அதிகரித்து காட்டுவதற்காக, சில மாவட்டங்களில் மாணவர்களின் விபரங்களில், இரட்டை பதிவுகள், போலி பதிவுகள் செய்வதாகவும், ஒரு பள்ளியில் சேர்ந்த மாணவரை, இன்னொரு பள்ளியிலும் பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அவ்வாறு இருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், எமிஸ் என்ற ஆன்லைன் தளத்தில், போலியான இரட்டை பதிவுகள் இல்லாமல் கண்காணிக்க, தொழில்நுட்ப குழுவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arachi
மார் 15, 2024 12:09

அப்படி cook பண்ணி கொடுக்கும் புள்ளி விவரங்கள் GERல் தெரிந்து விடும். எனவே 10% தவறு இருந்தாலும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பாராட்டக் கூடியதுதான். தனியார் பள்ளி நடத்துபவர்களுக்கு பாதிப்பு வரத்தான் செய்யும்.


Kasimani Baskaran
மார் 15, 2024 05:35

மாடலின் சிறப்பு. சாப்பாடு போடாமல் பல்லாயிரம் மாணவர்களுக்கு போட்டதாக கணக்குக்காட்டினால் சொளையாக அடிக்கலாம்...


மேலும் செய்திகள்