உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ்:ஊட்டி, கொடைக்கானலில் மே 7 முதல் இ-பாஸ் முறை அமல்

வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ்:ஊட்டி, கொடைக்கானலில் மே 7 முதல் இ-பாஸ் முறை அமல்

எதிர்வரும் 7ம் தேதி முதல் நீலகிரிக்கு வாகனத்தில் வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம்... இதில் யாருக்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது... வாகனங்களுக்கு மட்டுமே முறையாக இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு வர வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா பேட்டி...நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனின் நிலவி வருகிறது. இச்சமயங்களில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர்.இதனால் குறுகிய நகரமான உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அதனை தடுக்கும் வகையில் வரும் ஏழாம் தேதி முதல் ஜூன் 31-ம் தேதி வரை இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை இ-பஸ் பதிவு செய்த பின்னே மாவட்டத்திற்குள் வர வேண்டும் எனவும், வாகனத்தில் வரும் எத்தனை நபர்கள் என்று இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து நாளை புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த இணையதளம் மூலம் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறித்த எந்தவிதமான தடையும் இல்லை எனவும், முறையாக இ-பாஸ் பெற்று வரும் அனைத்து வாகனங்களும் நீலகிரிக்கு வரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை