உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: இபிஎஸ் விமர்சனம்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: இபிஎஸ் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''லோக்சபா தேர்தலில் அதிமுக.,வுக்கு ஓட்டளிப்பவர்களை 'டபுள் என்ட்ரி' எனக்கூறி நீக்கிவிட்டார்கள், தேர்தல் ஆணையம் வெளியிடும் ஓட்டு சதவீதத்தில் குளறுபடியும், சந்தேகமும் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்தாக பார்க்கப்படுகிறது,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=35bqicpo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் மழைநீரை தேக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பணை கட்டினோம். திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின்பு எந்த தடுப்பணையும் கட்டவில்லை. சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கேரள அரசு தடுப்பணை கட்டினால், அமராவதி ஆற்றுக்கு வரும் நீர் தடுக்கப்பட்டு தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். லோக்சபா தேர்தலில் பல்வேறு இடங்களில் அதிமுக.,வுக்கு ஓட்டளிப்பவர்களை 'டபுள் என்ட்ரி' எனக்கூறி நீக்கிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்தாகத்தான் பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் அறிவித்த ஓட்டுப்பதிவு சதவீதத்தில் குளறுபடியும், சந்தேகமும் உள்ளது. ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் அடிக்கடி சிசிடிவி பழுது ஏற்படுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் இதுபோன்று நடந்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுகவனம்
மே 20, 2024 17:12

வேகாத வெய்யில்லே தேர்தல் வெச்ச மாதிரி ஒரு கேலிக்கூத்து எங்கேயும் பாத்ததில்லை. இதுல வெளிநாட்டுக்காரங்களுக்கு வேற அழைப்பு.


venugopal s
மே 20, 2024 13:56

என்ன அவசரம்? அடுத்த 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு சொல்லி இருக்கலாமே!


Siva
மே 20, 2024 12:19

இப்போது நார் வாய்? அப்போது நல்ல வாய் திராவிட மாடல் வாழ்க


Jeya Prakash K
மே 20, 2024 12:15

இது வரை இல்லாதது இப்போது நடந்து கொண்டிருக்கிறது


Ramanujadasan
மே 20, 2024 11:35

கேவலமான தோல்விக்கு இப்போதே சாக்கு, காரணம் கண்டு பிடித்து விட்டார்


Jeya Prakash K
மே 20, 2024 12:18

Ithu varai illathathu ippothu nadandhu kondirukkinrathu


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை