உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைகை எக்ஸ்பிரஸில் மின்கசிவால் தீப்பொறி

வைகை எக்ஸ்பிரஸில் மின்கசிவால் தீப்பொறி

செங்கல்பட்டு:சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அந்த ரயில் மதியம், 3:00 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் ஆறாவது நடைமேடையில் நின்ற போது, 'டி- 1' ரயில் பெட்டியில் இருந்த சுவிட்ச் பாக்ஸில், பயணி ஒருவர் மொபைல் போனை சார்ஜ் செய்ய முயன்றார். அப்போது, திடீரென தீப்பொறிகள் பறந்தன. இதைக்கண்ட சக பயணியர் ரயிலில் இருந்த தீயணைப்பானை பயன்படுத்தி, தீப்பொறிகளை அணைத்தனர். தொடர்ந்து, ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், 10 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை