உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் 5 மாவட்டங்களில் ஜன.19ல் அமல்

காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் 5 மாவட்டங்களில் ஜன.19ல் அமல்

தேனி:காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கில் திரும்ப பெறும் திட்டம் 5 மாவட்டங்களில் ஜன., 19 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.சுற்றுலாத்தலங்களான ஊட்டி, கொடைக்கானல் பகுதிகள், கோவை மாவட்டத்தில் காலி மது பாட்டில்கள் டாஸ்மாக் மூலம் திரும்ப பெறப்படுகிறது. அந்த பாட்டில்களுக்கு ரூ. 10 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஜன.,19 முதல் தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது. டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும். காலி மதுபாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் வழங்கி ரூ. 10 பெற்றுக்கொள்ளலாம். இது உயர்நீதிமன்ற உத்தரவு ஆகும். வரும் நாட்களில் அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை