மேலும் செய்திகள்
பழமையான தவ்வை சிற்பம்; கோட்டக்குப்பம் அருகே கண்டுபிடிப்பு
16 hour(s) ago
தினமலர் வித்யாரம்பம்; விருத்தாசலத்தில் கோலாகலம்
16 hour(s) ago
பட்டாசு கடைகளுக்கு அனுமதி விருதையில் ஆர்.டி.ஓ., ஆய்வு
16 hour(s) ago
நல்பாரி: அசாம் மாநிலத்தில் மூளை சம்பந்தமான மர்ம நோய் தாக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் உள்ள சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் சிலர் மர்ம நோயினால் தாக்குதலுக்குள்ளாயினர். இவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நோய் தாக்கிய 7 பேர் மூளை செயல்பாடுகள் இழந்து அடு்த்தடுத்து திடீரென இறந்தனர். இதனால் கிராமப்புறப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இச்சம்பவம் அறித்து மாநில சுகாதராத்துறையினர் நோய் தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் முகாமிட்டு மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும் 20 மாவட்டங்களில் இந்த நோய் வேகமாக பரவக்கூடும் என்பதால் மாநில சுகாதாரத்துறையினர் இம்மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி வாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மர்ம நோயினை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இற்கிடையே சிபிசாகர் மாவட்டத்தி்ல் 34 பேருக்கு மர்ம நோய் தாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை செயல்பாடு இழந்து சிறிது சிறிதாக மரணத்தை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago