உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது: ராகுல்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது. ஆனால் பிரதமர் ஒரே நாடு ஒரே மொழி, ஒரே தலைவர் என பேசிவருவது ஆச்சரியமாக இருப்பதாக காங்., எம்.பி., ராகுல் பேசினார்.கோட்டயம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர், ஒரே மதம் போன்று பிரதமர் மோடி பேசிவருவதை கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழக மக்களை தமிழ் பேசாதீர்கள் என்றோ, கேரள மக்களிடம் மலையாளம் பேசாதீர்கள் என்றோ எப்படி சொல்ல முடியும்? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது. எப்போதெல்லாம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் நாட்டை பிளவுப்படுத்துகின்றனர். தற்போது இந்தியாவில் 70 கோடி குடிமக்களிடம் இருக்கும் சொத்துக்கு நிகராக 22 பேரின் சொத்துகள் உள்ளன. நம் விவசாயிகள் உதவிக்காக கதறுகின்றனர், இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். அப்படி இருக்கையில் எப்படி இந்தியா வல்லரசு ஆகிவிட்டதாக கூறுகிறீர்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

பேசும் தமிழன்
ஏப் 19, 2024 19:39

அப்போ இத்தாலி மொழி முக்கியமில்லையா..... பப்பு நீ என்ன தான் கூவினாலும்.... இந்திய மக்கள் உங்கள் குடும்பத்தை.... போலி காந்தி கும்பலை நம்ப தயாராக இல்லை !!!


முருகன்
ஏப் 19, 2024 10:38

ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு மொழி பேசும் போது ஒரே தேசம் ஒரே மொழி என இந்தியை தினிக்க நடக்கும் நாடகம் இது . இது புரியாமல் ஒரு சிலர் இருப்பது வேடிக்கையாக உள்ளது


kumar
ஏப் 19, 2024 08:05

ஐயா மேதாவி, நம்ம பிரதமர் எப்போ ஒரே மொழி, ஒரே மதம் அப்படின்னு சொன்னார்? மக்களை பிரிக்கறதுக்கே, வெறி ஏத்தவும் நீ அரசியல்ல இருக்க


Sivaraman
ஏப் 19, 2024 07:37

பொன்மொழி புளித்து விட்டது


கண்ணன்
ஏப் 19, 2024 06:54

அதி புத்திசாலி


J.V. Iyer
ஏப் 19, 2024 06:11

ராகுல் தத்தியின் பொன்மொழிகளைக்கேட்டால் தினமும் உற்சாகம் வரும் இவரே இப்படி இருக்கும்போது, நம்மால் முடியாதா என்று ஊக்கம் வரும்


vijai seshan
ஏப் 19, 2024 05:43

இதுக்கு என்ன தெரியும் உலறது


nv
ஏப் 19, 2024 00:44

ஹிந்தி திணிப்பு செய்தது காங்கிரஸ்!! இப்போது பப்பு புது பாட்டு பாடுது??


Kasimani Baskaran
ஏப் 18, 2024 22:13

நேற்று தமிழ் முக்கியம் இன்று எல்லா மொழிகளும் முக்கியம் எப்டி


RAJ
ஏப் 18, 2024 22:10

சாறு சொல்ற நியூஸ்ச பேப்பர்ல போட்டுருங்க எப்புடி புத்திசாலி மாதிரி பேசுறாரு பாருங்க மொக்கைச்சாமி உன்ன அடிச்சுக்க முடியாதப்பா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை