உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ - மெயிலில் இனி காயச்சான்று: ஆறுதல் அளிப்பதாக போலீஸ் தகவல்

இ - மெயிலில் இனி காயச்சான்று: ஆறுதல் அளிப்பதாக போலீஸ் தகவல்

சென்னை : வழக்கு தொடர்பாக, விசாரணை அதிகாரிக்கு தேவைப்படும், காயச்சான்று, 'இ - மெயிலில்' அனுப்பி வைக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.கொலை, கொலை முயற்சி மற்றும் சாலை விபத்தில் சிக்கி உயிர் பிழைப்போர் என, பல்வேறு வழக்குகள் தொடர்பாக, இந்திய சாட்சிய சட்டப் பிரிவு, 45ன் படி, பிரேத பரிசோதனை அறிக்கை, காயச்சான்று, தடய அறிவியல் சான்று, ரசாயன தடய அறிவியல் பரிசோதனை கூட சான்று பெற வேண்டியது கட்டாயம். அரசு மருத்துவமனைகளில், சம்பந்தப்பட்ட இந்த சான்றுகளை, விசாரணை அதிகாரி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த சான்றுகளை பெறுவதில், போலீசாருக்கு சிக்கல் உள்ளது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் நேரடியாக, காயச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை பெற, மருத்துவமனைக்கு செல்ல மாட்டார்கள். எங்களை போன்ற கான்ஸ்டபிள் நிலையில் உள்ளவர்களையே அனுப்புவர். எங்களுக்கு அரசு டாக்டர்கள் ஒத்துழைப்பது இல்லை. 'பிரேத பரிசோதனைக்கு செல்கிறேன்; அப்புறம் வாருங்கள்' என்பர். 'இப்போது தான் பிரேத பரசோதனை முடிந்தது. குளிக்காமல் சான்றுகள் தருவது இல்லை' என, கூறிவிடுவர். டாக்டர் கையெழுத்திட்டாலும், அந்த சான்றுகளை தரும் அலுவலக ஊழியருக்கு, 'கட்டிங்' தர வேண்டும். அப்போது தான் விரைந்து தருவார்.அதற்குள் விசாரணை அதிகாரிகள்,' சான்றிதழ்கள் என்னாச்சு' என, கேட்டு பாடாய்ப்படுத்துவர். 'நீ வேலைக்கு ஆகமாட்டாய்' என்ற பேச்சும் விழும். இந்த தொல்லைகளில் இருந்து விடுபட, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சான்றுகளை விசாரணை அதிகாரிக்கு,'இ - மெயிலில்'அனுப்ப வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று, தற்போது காயச்சான்று மட்டும் அனுப்புவதாக கூறி உள்ளனர். இது ஆறுதல் அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை