உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காசி தமிழ் சங்கமம் பங்கேற்பாளர்களுக்கு அனுபவ பகிர்வு போட்டி

காசி தமிழ் சங்கமம் பங்கேற்பாளர்களுக்கு அனுபவ பகிர்வு போட்டி

சென்னை: தமிழகத்தில் இருந்து, 'காசி தமிழ் சங்கமம் 4.0' பயணத்தில் பங்கேற்போருக்கு, 'காசி தமிழ் சங்கமம் 4.0 அனுபவப் பகிர்வு' குறித்த போட்டியை, மக்கள் மாளிகை அறிவித்துள்ளது. காசி தமிழ் சங்கமம் நான்காம் பதிப்பு, நேற்று துவங்கி, டிச., 15ம் தேதி வரை வாரணாசியில் நடக்கிறது. இதில் பங்கேற்போருக்காக, மக்கள் மாளிகை சார்பில், 'காசி தமிழ் சங்கமம் 4.0 அனுபவப் பகிர்வு' என்ற போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்போர், தமிழ் அல்லது ஆங்கிலத்தில், 'ஏ - 4' தாளில் கையால் எழுத வேண்டும். பின்புறம் எழுதுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் 1,000 வார்த்தைகள் இருத்தல் வேண்டும். அதன் முழு நகலை, தமிழகத்தை சேர்ந்த பங்கேற்பாளர்கள், மக்கள் மாளிகை, கவர்னர் செயலகம், கவர்னர் துணைச் செயலர்' 'சென்னை - 600 022,என்ற முகவரிக்கு, ஜனவரி 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதில், 'காசி தமிழ் சங்கமம் 4.0' ல் உள்ள தங்கள் குழுவின் பெயர், குடியிருப்பு முகவரி, தொகுதி எண், வகை மற்றும் தொடர்பு எண்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகங்கள் உட்பட ஏழு பிரிவுகளில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், சிறந்த மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுவோருக்கு, சென்னை மக்கள் மாளிகையில் நடக்கும் விழாவில், ரொக்கப் பரிசாக, 10,000; 7,000; 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை