உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அறநிலையத்துறை வழக்குகளில் ஆஜராக நான்கு பேர் நியமனம்

 அறநிலையத்துறை வழக்குகளில் ஆஜராக நான்கு பேர் நியமனம்

சென்னை: உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அ மர்வுகளில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு எதிரான வழக்குகளில் ஆஜராக, மூன்று மூத்த வழக்கறிஞர்கள் உட்பட நான்கு வழக்கறிஞர்களை நியமித்து, தமி ழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் கொள்கை முடிவுகள், உபரி நிதி பயன்பாடு, அறங்காவலர்கள் நியமனம், யானைகள் பராமரிப்பு, கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் ம ற்றும் அறநிலையத்துறை சட்டப்பிரிவுகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் 2,000 வழக்குகள் உள்ளன. தினமும் சராசரியாக, 25 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. நீதிமன்றங்களில் நாளொன்றுக்கு 50 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஹிந்து சமய அறநிலையத் துறை தொடர்பான வழக்குகளில் ஆஜராக, முன்னாள் தலைமை வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான ஆர்.சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் மற்றும் வழக்கறிஞர் ஆர்.பரணிதரன் ஆகியோரை நியமிக்க வேண்டும் என, ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஒப்புதல் பெற்று, நான்கு வழக்கறிஞர்களையும் நியமித்து, நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை