| ADDED : மார் 07, 2024 11:56 AM
ஊட்டி:நீலகிரி மாவட்டம் ஊட்டியில், பொதுப்பணி துறை மூலம் கட்டடப்பட்ட 50 புதிய அரசு குடியிருப்புகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுப்பணி துறை அமைச்சர் வேலு பேசுகையில், ''தமிழகம் முழுதும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில், பொதுப்பணி துறை சார்பில் பல்வேறு வடிவிலான அரசு குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன.''கடந்த காலங்களில், 'முகலாய பேரரசு கட்டிய கட்டடத்திற்கு முகலாய கட்டட கலை, பிரிட்டிஷார் கட்டிய கட்டடத்திற்கு ஆங்கிலேயர் கட்டட கலை' என, தனிப்பெருமையுடன் அடையாளப்படுத்தி சொல்லி வருகிறோம். அதேபோல, தமிழகத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் பொதுப்பணி துறை கட்டடங்கள், 'ஸ்டாலின் கட்டட கலை' என்று பெருமையாக சொல்லப்படும்,'' என்றார்.