உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு 

 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு 

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்தது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் கடந்த ஒரு மாதமாக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 11,460 ரூபாய்க்கும், சவரன், 91,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 169 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் அதிகரித்து, 11,630 ரூபாய்க்கு விற்பனை யானது. சவரனுக்கு, 1,360 ரூபாய் உயர்ந்து, 93,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து, 172 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை