உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: புதுக்கோட்டைக்கு கடத்த முயன்றபோது செக்

ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: புதுக்கோட்டைக்கு கடத்த முயன்றபோது செக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: இலங்கையில் இருந்து புதுக்கோட்டைக்கு ரூ.10.03 கோடி மதிப்பிலான 13.9 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற 5 பேரை வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் மடக்கி பிடித்து, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.இலங்கையில் இருந்து கடலோரப் பகுதி வழியாக தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில், அதிகாரிகள் குழுவின் சோதனையில், ஒருவர் 5892.15 கிராம் (5.8 கிலோ) எடையுள்ள தங்கத்தை 6 பாக்கெட்டுகளில் வைத்து எடுத்துச்சென்றுள்ளார். அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து மதுரை - சிவகங்கையில் சோதனையிட்ட அதிகாரிகள் குழு, தங்கம் கடத்திச் சென்ற இருவரையும், தங்கத்தைப் பெறவிருந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தது. அவர்களிடமிருந்து மொத்தம் 8060.5 கிராம் (8 கிலோ) எடையுள்ள தங்கம் வைக்கப்பட்டிருந்த ஏழு பாக்கெட்களையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.10.03 கோடி மதிப்புள்ள 13.952 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட தங்கம், இலங்கையில் இருந்து, தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடத்த கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இது தங்கத்தை கடத்திவந்த 5 பேர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
மே 14, 2024 16:43

அவங்களே தான். ஹவாலா, கடத்தல் அமைதி மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையோ?.


Natarajan Ramanathan
மே 14, 2024 16:36

கீழக்கரை, தொண்டி, கோட்டை பட்டினம், ஜெகதா பட்டினம், மீமிசல் போன்ற பகுதிகளில் இந்தமாதிரி தங்க கடத்தல் தினந்தோறும் நடக்கிறது நூறு சதம் மர்ம மதத்தினரால் நடத்தப்படும் குலத்தொழில் இதுவே


இவன்
மே 14, 2024 16:12

தங்கம் கடத்த கூட அனுமதி இல்ல யா ??


sethu
மே 14, 2024 16:01

அன்றாடம் டீ செலவுக்கு கூட தொழில் செய்ய விடமாட்டேன் என்றால் எப்படி? வாங்க விட மாட்டார்களா?


Palanisamy Sekar
மே 14, 2024 15:44

அக்ஷ்யதிருத்திக்கு தங்கம் வாங்கிட்டு வந்திருப்பாங்க சார் விட்டுடுங்க ன்னு யாரும் இன்னும் சொல்லல


thanjai NRS krish
மே 14, 2024 15:37

அந்த மர்ம நபர்களின் பெயர்களை ஏன் வெளியிடுவதில்லை


sri
மே 14, 2024 16:46

அதுதான் மர்மம்


raja
மே 14, 2024 17:35

உங்களுக்கு அந்த மர்ம நபர்கள் யாராக இருக்கும் என்று புரிந்துவிட்டது என்று எங்களுக்கு தெரியும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை