உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.,-எப் 14 ராக்கெட்

நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.,-எப் 14 ராக்கெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., - எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட்.ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், எரிபொருள் கண்காணிப்பு உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Seshan Thirumaliruncholai
பிப் 16, 2024 08:45

படைப்பு காப்பு அழிப்பு இவற்றை தவிர மற்றவை எல்லாவற்றையும் செய்திட இயலும். ஆராய்ச்சி உயிருள்ள உயிரற்ற எல்லாவற்றிக்கும் உதவும் என்றால் பாராட்டப்பட்டவை. பாரதம் இதில் ஈடுபடுவதால் நிச்சியம் வெற்றி அடைய பிரார்த்தனைகள்.


duruvasar
பிப் 16, 2024 08:05

இதற்காகும் செலவில் பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டலாமா என நோட்புக் மணி போன்ற அறிவு ஜீவிகள் பேசுவார்கள். அவர்கள் எண்ணம் அதுவல்ல பள்ளி கல்லூரி கட்ட ஒதுக்கப்படும் பணத்தில் டெண்டரில் கமிஷன் அடிக்கலாம் என்பது மட்டுமே. இவர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள் என சொல்லிக் கொள்வார்கள்.


Ramesh Sargam
பிப் 16, 2024 07:43

வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு. இந்த விண்வெளி அனுப்பும் 'செய்திகளை' உடனுக்குடன் தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தவும். ஏன் என்றால், போன பேரழிவின்போது, வானிலை மையம் சரியான முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காததால்தான் தமிழக அரசு முறையாக பேரிடரை சமாளிக்க முடியவில்லை என்று வானிலை மையத்தின் மீது 'ஒரேபடியாக' பழி போட்டார்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ