உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குருவாயூர்--மதுரை ரயில் 3 மணி நேரம் தாமதம்

குருவாயூர்--மதுரை ரயில் 3 மணி நேரம் தாமதம்

ஸ்ரீவில்லிபுத்துார்: கேரளாவில் கனமழை காரணமாக நேற்று காலை 5:50 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை ரயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 8:43 மணிக்கு புறப்பட்டு வந்ததால் கேரள, தமிழக ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.கேரளாவில் பெய்த மழையின் காரணமாக, நேற்று காலை 5:50 மணிக்கு குருவாயூரிலிருந்து மதுரைக்கு புறப்பட வேண்டிய ரயில் 3:00 மணி நேரம் தாமதமாக காலை 8:43 மணிக்கு தான் புறப்பட்டது. தமிழக எல்லையான செங்கோட்டைக்கு மதியம் 3:10 மணிக்கு வர வேண்டிய ரயில் மாலை 6:19 மணிக்கு வந்தது. கேரளாவில் துவங்கி மதுரை வரை உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பயணிகள் காத்திருந்தனர். மழை பெய்ததால் மிகுந்த அவதியும் அடைந்தனர். மதுரைக்கு சென்று இணைப்பு ரயில்களை பிடிக்க வேண்டிய பயணிகள் பஸ்களில் பயணித்தனர். சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் 30 நிமிடம் தாமதமாகவே பயணித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை