உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வரும் 7ம் தேதி உள்துறை அமைச்சர் தமிழகம் வருகை

 வரும் 7ம் தேதி உள்துறை அமைச்சர் தமிழகம் வருகை

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 7ம் தேதி தமிழகம் வருகிறார். பா.ம.க., தலைவர் அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்புகிறார். இதற்கு, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் முட்டுக்கட்டை போடுவதால், பா.ம.க., பிளவுபட்டுள்ளது. அக்கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியில், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நடிகர் விஜயின் த.வெ.க.,வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்த சூழலில், தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சை காங்கிரஸ் கட்சி துவக்கி விட்டது. எனவே, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் பணியை வேகப்படுத்த மத்திய அமைச்சர் அமித் ஷா, வரும் 7ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், பா.ம.க., தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி