உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் காப்பீட்டை ஏற்க மருத்துவமனை மறுப்பு : ரூ.3.64 லட்சத்துடன் ரூ.50,000 இழப்பீடு தர உத்தரவு

முதல்வர் காப்பீட்டை ஏற்க மருத்துவமனை மறுப்பு : ரூ.3.64 லட்சத்துடன் ரூ.50,000 இழப்பீடு தர உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், இதய அறுவை சிகிச்சைக்காக பெற்ற, 3.64 லட்சம் ரூபாய் கட்டணத்தை, 50,000 ரூபாய் இழப்பீட்டுடன் சேர்த்து வழங்க, திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த மோகன் என்பவர், தாக்கல் செய்த மனு:கடந்த, 2016 முதல் இதயத்தில் சிறியளவில் பிரச்னை இருந்து வந்தது. இதற்காக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில், 2018 டிச., 26 இதய அறுவை சிகிச்சைக்கு சேர்ந்தேன். மறுநாள் அறுவை சிகிச்சை முடிந்தது. முதல்வர் மற்றும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுக்கான அட்டையை சிகிச்சைக்கு முன் வழங்கினேன். அறுவை சிகிச்சைக்கு, முதல்வர், பிரதமரின் காப்பீடு அட்டைகள் ஏற்கப்படும் என்ற அறிவிப்பு, மருத்துவமனை வளாகத்தில் ஒட்டப்பட்டு இருந்தது. இருப்பினும், இதய அறுவை சிகிச்சைக்கு பின், காப்பீடு திட்ட அட்டைகள் ஏற்கப்படாது எனக்கூறி, 3 லட்சத்து, 64,673 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.அறிவிப்புக்கு மாறாக, காப்பீடு திட்ட அட்டைகளை ஏற்காதது சேவை குறைபாடு; நியாயமற்ற வணிக நடவடிக்கை. எனவே, மன உளைச்சல் ஏற்படுத்திய மருத்துவமனை நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.மனுவை, திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் எஸ்.எம்.லதா மகேஸ்வரி, உறுப்பினர்கள் பி.வினோத்குமார், பி.முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் நபர், காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுவதற்கான தகுதி பற்றி, வெளிப்படுத்தி இருப்பார். காப்பீடு திட்டங்களின் கீழ் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக, புகார்தாரர் அல்லது அவரது உதவியாளர் என யாரும் தெரிவிக்கவில்லை என்ற மருத்துவமனை தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.பணம் செலுத்தும் முறை, நோயாளியின் காப்பீட்டு திட்டத்தின் உரிமை உள்ளிட்டவை குறித்து, மருத்துவமனை அல்லது மருத்துவமனை சார்ந்த உயர் அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்; இது கடமை. அறுவை சிகிச்சை குறித்தோ, மருத்துவர் மீதோ, எவ்வித குற்றச்சாட்டையும் கூறவில்லை. மருத்துவமனை தரப்பு சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, சிகிச்சைக்கு செலுத்திய கட்டணம், 3 லட்சத்து, 64,673 ரூபாயை புகார்தாரருக்கு திருப்பி அளிக்க வேண்டும். மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, 50,000 ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக, 5,000 ரூபாயையும், மருத்துவமனை நிர்வாகம் செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

P.krishnan
மே 29, 2024 19:38

பல தனியார் மருத்துவமனைகளில் இது போன்ற தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இது போன்ற தவறுகள் நடக்காமல் அதிகாரிகள் சீர்செய்ய வேண்டும்.


Madurai Jeyaraj
மே 21, 2024 12:37

தெளிவாக ஷெனாய் நகர் பில்ரோத் மருத்துவமனை என்று முதலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது


theruvasagan
மே 20, 2024 17:30

பல்லாயிரக் கணக்கில் பிரிமியம் செலுத்தி எடுத்துக் கொண்ட காப்பீட்டு திட்டங்களில் ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி நிவாரணம் தர மறுக்கும் நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை


Syed
மே 20, 2024 10:21

if the penalty was higher then the hospital will not repeat the same fault still the justice is not served fully to the suffered patient , it is partial in favour of the hospital


Siva
மே 20, 2024 09:51

மருத்துவம் உதவியில் அரசு தெளிவாக இல்லை எல்லாருக்கும் ஆயுள் கடவுளின் அருள் அதற்காக காப்பீடு என்பது ஏமாற்ற குறியீடுகள் வாழ்க ஊழல் வளர்க அரசியல்வாதி தக்காளி ?


P.krishnan
மே 29, 2024 19:30

ஐயா, இன்றுவரை யிலும் பல தனியார் மருத்துவமனைகளில் கேட்கும் போது முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவம் பார்க்க படும் என்று கூறிக் கொள்கின்றனர். ஆனால் பார்ப்பதில்லை.தங்களுக்கு நிதி வரவில்லை என்று அலைக்கழிக்து வருகின்றார்கள் .இதனால் மருத்துவம் பார்க்க இயலாமல் போகின்றது. மனித உயிர்களும் பறிக்க படுகின்றன. இதை மருத்துவ நிர்வாகம் சரி செய்யுமா? இல்லை முதலமைச்சர் சரி செய்வாரா?


ramesh kennedy
மே 20, 2024 09:49

அந்த மருத்துவமனையின் பெயரை குறிப்பிடாமல் புகார் அளித்தவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு செய்தி வழங்குவது நியாயமா ?


கல்யாணராமன் சு.
மே 20, 2024 10:50

மருத்துவமனையின் பெயர் குய்ப்ப்பிடப்பட்டுள்ளது அது அண்ணா நகரில் உள்ள பில்ரோத் Bilroth மருத்துவமனை


கல்யாணராமன் சு.
மே 20, 2024 10:51

மன்னிக்கவும், அது ஷெனாய் நகரில் உள்ளது மருத்துவமனையின் பெயர் நான் குறிப்பிட்டதுதான்


Anantharaman Srinivasan
மே 20, 2024 12:11

செய்தியை இன்னொரு முறை படி


ஆரூர் ரங்
மே 20, 2024 09:30

மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநில அரசு உறங்கியது ஏன்? அப்போ காப்பீட்டு திட்டம் யாருடைய பாக்கெட்டை நிரப்ப?


Kanns
மே 20, 2024 08:43

Good Judgement


Kasimani Baskaran
மே 20, 2024 07:34

ஸ்டிக்கர் ஒட்டி விட்டால் முதல்வர் திட்டமாகி விடுமா?


Chitrarasan subramani
மே 21, 2024 16:34

ல் யார் ஆட்சி?


Rangarajan
மே 20, 2024 06:57

ஆஹா நல்ல விஷயம் ஆனால் எந்த விதமான காப்பீடு திட்டத்திலும் ஏன் பல் சிகிச்சைக்கு காப்பீடு திட்டம் மற்றும் ரீஎம்பர்ஸ்மெண்ட்டும் இல்லை எதனால் என்று காப்பீடு நிறுவனங்கள் விளக்கம் திட்டமிட்ட


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை