| ADDED : நவ 27, 2025 01:33 AM
பரமக்குடி: 'நான் கொள்கைக்காக வேலை செய்கிறேன்' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். பரமக்குடியில் அவர் அளித்த பேட்டி: இரண்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், எம்.எல்.ஏ., பதவியில் இருந்து செங்கோட்டையன் விலகுவதால் எந்த பெரிய தாக்கமும் ஏற்படாது. வேறு ஒரு கட்சிக்கு செல்லும் அவர், இருந்த கட்சியில் பெற்ற பதவி தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். பேட்டி எடுக்கும் செய்தியாளர்கள் கேள்வியை தன்மையாக கேட்க வேண்டும். தர்க்கம் செய்யக்கூடாது. செய்தியாளர்கள் ஒரு நிறுவனத்திற்காக வேலை செய்கிறார்கள். நான் கொள்கைக்காக வேலை செய்கிறேன். தவறாக கேள்வி கேட்டதாலும் நான் கூறும் பதிலை உள்வாங்காததாலும் கோபம் வந்தது. நான் ஆசிரமங்கள், மடங்களில் இருந்து வரவில்லை. என் ஊர் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு தெரியும். எங்களை கட்டுப்படுத்தி, பக்குவப்படுத்தி வருகிறோம். உங்கள் கருத்தை என் மீது திணிக்க நினைக்கக் கூடாது. அதனால் எனக்கு கோபம் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், பேசிய சீமான், நாம் தமிழர் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் முத்துகேசவன், பரமக்குடி தனி தொகுதியில் எழில் இளவரசி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.