உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்; புத்தக கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பதிவு

அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்; புத்தக கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பதிவு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவர் 60க்கும் மேற்பட்ட நூல்களை வாங்கியதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது அறிக்கை: அறிவுத்திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம். வள்ளுவர் கோட்டத்தில் புத்தக கண்காட்சியில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.குறிப்பாக, 'Carry on, but remember' எனும் அண்ணாதுரை பார்லிமென்டில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும், அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன். வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதி மற்றும் திமுகவினருக்கு மீண்டுமொரு முறை எனது பாராட்டுகள். வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kumarkv
நவ 16, 2025 21:02

மீதி பேர் படித்து கூறுங்கள்


N S
நவ 16, 2025 20:26

அப்பா அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கியது ஆச்சர்யமானதுதான். மகன் மற்றும் பேரன் படிக்கவேண்டிய புத்தகங்கள் எத்தனை? அவற்றிற்கு யார் பணம் கொடுத்தார்கள்?


sundarsvpr
நவ 16, 2025 20:07

புத்தகம் வாங்கியது அவர் கணக்கில்லா அரசு கணக்கா என்று தெரியவில்லை. எப்படிஇருந்தும் வாங்கிய பொருள் புத்தகங்கள் தரமானதா என்பது ஸ்டாலினுக்கு மட்டும் தெரியும். முதல் அமைச்சர் என்பதால் பதிப்பாளர்கள் இலவசமாய் கொடுத்துஇருக்கலாம். தவறு இல்லை. அதாவது மரியாதை அன்பளிப்பு. உதயநிதி வாங்கியதை பற்றி பேசுவது அவ்வளவு அவசியம் இல்லை. இவருக்கும் இலவசமாய் கொடுத்துஇருக்கலாம்


Anvar
நவ 16, 2025 19:04

அதுல ஒரு புத்தகத்தையாவது ஒரு பக்கத்தையாவது படிப்பாரா


Indian
நவ 16, 2025 21:44

படிப்பார் . என்ன அவ்வளவு அக்கறை ??


Srinivasan Narasimhan
நவ 16, 2025 21:59

ஒரு வரி படிக்கணும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி